அதாவுல்லாஹ் நாவை அடக்கிப் பேசாவிடின் அவரது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்- முகம்மது ரஸ்மின் எச்சரிக்கை



பாறுக் ஷிஹான்-
கோட்டபாய ராஜபக்ஸவிற்கு கூஜா தூக்கிய நீங்கள் ஜனாஸா எரிப்பை கிண்டல் செய்கிறீர்களா? நீங்கள் சிறந்த நகைச்சுவையாளன தான்.உங்களது கேலிப் பேச்சும் இந்த காமெடி பேச்சும் செய்ய இது களமில்லை. இது பாராளுமன்ற தேர்தல். நாவை அடக்காவிட்டால் உங்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும் என "வி ஆ வண்"( we are one) அமைப்பின் இணைப்பாளர் மொகமட் ரஸ்மின் எச்சரிக்கை விடுத்தார்.

அம்பாறை ஊடக மையத்தில் சமகால அரசியல் தொடர்பாக நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

இலங்கை வரலாற்றை மாற்றி அமைக்கப் போகும் முக்கியமான தேர்தல் இதுவாகும். கோட்டபாயவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இந்த 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியேற்றப்பட வேண்டும் மாறாக புதியவர்கள் வரவேண்டும் என்று கூறினார்கள்.இதனால் ரணில் மைத்திரி தினேஷ் உள்ளிட்ட 60 பேர் தேர்தலில் இருந்து விலகி விட்டார்கள். ஆனால் நமது இஸ்லாமிய தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளனர் .

மகிந்த கொண்டு வந்த பதினெட்டுக்கும் மைத்ரி கொண்டு வந்த 19க்கும் கோட்டா கொண்டு வந்த 20 க்கும் கை தூக்கினார்கள்.நடந்தது என்ன? பல வயது குழந்தையையும் எரித்தார்கள். அப்பொழுது இந்த முஸ்லிம் தலைவர்கள் வாய் மூடி மௌனியாக கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இன்று ஜனாசா எரிப்பை கேலி செய்கிறார்கள். அது மாபெரும் சட்டமாம். இவர்களால் சமூகத்திற்கு ஆனதொன்றுமில்லை. மக்களே இப்படிப்பட்ட துரோகிகளை மீண்டும் அரியாசனத்தில் ஏற்ற விரும்புகிறீர்களா? என்று கேட்க விரும்புகின்றேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :