அமெரிக்காவுக்கு கட்டுப்படாமல் அனுரவினால் ஆட்சி நடாத்த முடியுமா ? அமெரிக்காவின் முதல் எச்சரிக்கை என்ன ?



லகில் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் இணங்கிப்போகாவிட்டால் ஆட்சி செய்வது அல்லது ஆட்சியில் நீடிப்பது கடினம் என்பது உலக வரலாறு.

பொதுவாக சிவப்புச் சட்டை அணிந்தவர்கள் அதாவது இடதுசாரிகள்தான் அமெரிக்காவின் எதிரிகள். அதனாலேயே இரண்டாவது உலகமகா யுத்தத்துக்கு பின்பு அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையில் பல தசாப்தங்களாக பனிப்போர் மூண்டது. அதில் சோவியத் யூனியனை பிளவுபடுத்தி அமெரிக்கா வென்றது.

அவ்வாறு அமெரிக்காவை நேரடியாக எதிர்த்து ஆட்சி செய்வதென்றால் கியூபா, வடகொரியா, ஈரான் போன்று பலமுள்ள நாடாகவும், அதன் பின்னணியில் நேரடியாக உதவி செய்யக்கூடிய ரஷ்யா போன்ற சக்திகள் இருக்க வேண்டும்.

உலக வரலாற்றில் அமெரிக்காவை எதிர்த்ததன் காரணமாக பல ஆட்சியாளர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதுடன், பலர் ஆட்சியை இழந்த வரலாறுகள் உள்ளது.

சதாம் ஹுசைன், கதாபி, பசர் அல்-அசாத் போன்ற தலைவர்களை சூழ்சிகள் மூலம் ஆட்சியிலிருந்து அகற்ற முடியாததன் காரணமாக ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளை அழித்து பல்லாயிரக்கணக்கான மக்களை கொலை செய்தனர்.

அதில் சிரியா நாட்டுக்கு ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளின் நேரடி உதவி இருந்ததன் காரணமாக பசர் அல்-அசாத் தப்பித்துக்கொண்டார். ஆனால் உதவிகள் இல்லாததன் காரணமாக சதாம் ஹுசைனும், கதாபியும் கொலை செய்யப்பட்டனர்.

அண்மைக் காலங்களில் அமெரிக்காவுக்கு இணங்கிப் போகாததன் காரணமாக பாகிஸ்தான், மலேசியா, பங்காளதேஸ் ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்களான இம்ரான்கான், மகாதீர் மஹ்மூத், சேக் ஹசீனா ஆகியோர் பதவியிழந்தனர்.

அதுபோல் ஆபிரிக்கா கண்டத்தில் தனக்கு எதிரான நாடுகளில் குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி வன்முறைகளையும், அழிவுகளையும் ஏற்படுத்தினர்.

இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னாள் அமெரிக்க பிரஜையாக இருந்துகொண்டு அமெரிக்காவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை. குறிப்பாக எம்.சி.சி உடன்படிக்கை (Millenium Challenge Corporation) போன்ற காரணங்களினால் மிக நுணுக்கமாக கோட்டாவை ஆட்சியிலிருந்து அகற்றியது அமெரிக்கா.

தற்போது இலங்கையை ஆட்சி செய்கின்ற அனுரகுமார திசாநாயக்க ஒரு சீனா சார்புடைய சிவப்பு சட்டை அணிந்த இடதுசாரி. எதிர்காலங்களில் இவர் எவ்வாறு அமெரிக்காவை அனுசரித்து நடக்கப்போகின்றார் என்ற கேள்வி பரவலாக உள்ளது.

இன்று நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாத் துறையிலேயே தங்கியுள்ளது. சுற்றுலாவுக்காக வெளிநாட்டவர் இலங்கைக்கு வருவது தடைப்பட்டால், மீண்டும் 2022 ம் ஆண்டு நிலைமை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் உள்ள சூழ்நிலையில், பொத்துவில் பிரதேசத்தில் உள்ள அறுகம்பையில் இஸ்ரேலிய உல்லாச பிரயாணிகளை இலக்குவைத்து தாக்குதல் நடாத்த முயல்வதாக அமெரிக்க தரப்பிலிருந்து பரப்பப்பட்ட புரளியானது, அனுரகுமார திசாநாயக்காவுக்கு வழங்கப்பட்ட முதலாவது எச்சரிக்கையாக கருத முடியும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :