அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிகளில் கல்முனை கல்வி வலயத்திற்கு இதுவரை இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
பிரிவு ஐந்து பேச்சுப் போட்டியில், நிந்தவூர் கமு/கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவன் அ.ஹ.மு.அசாம்; பிரிவு ஒன்று ஆக்கமும் எழுத்தும் போட்டியில் நிந்தவூர் கமு/கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி ம .ஹஸ்னத் ஹனா ஆகியோரே முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இருவருக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையிலான கல்முனை வலயம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் கல்முனை கல்வி வலயம் 22 முதலிடங்களைப் பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment