எச்.எம்.எம்.பர்ஸான்-
மாகாண மட்ட நீர் ரொக்கட் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தரம் 6 தொடக்கம் 9 வரை கல்வி கற்கும் மாணவர்களின் ஆக்கத்திறனை வளர்த்தல் மற்றும் விஞ்ஞான எண்ணக்கருக்களின் சிறந்த பிரயோகம் என்பவற்றை மேம்படுத்துவதை நோக்காக கொண்டு இந்த நீர் ரொக்கட் போட்டியை நடாத்தியது.
அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை (20) வந்தாறுமூலை மத்திய கல்லூரி மைதானத்தில் மாகாண மட்ட நீர் ரொக்கட் தாயாரித்து செலுத்தும் போட்டி இடம்பெற்றது.
இதில், ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் மகளிர் பிரிவில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற மாணவிகளான எம்.ஏ.அய்மன் அத்தீயா, ஏ.எம்.அன்ஷிஹா ஆகிய மாணவிகளுக்கும் மாணவிகளை தயார்படுத்திய விஞ்ஞானப் பாட ஆசிரியை கே.ஆர்.எப்.இஷாராவுக்கும் அதிபர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment