முனீரா அபூப்க்கர்-
கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் அமைச்சின் புதிய செயலாளர் தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.*
கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் அமைச்சின் புதிய செயலாளர் ஏ.எம்.பி.எம்.பீ. அத்தபத்து அவர்கள் பத்தரமுல்லை, செத்சிறிபாயவிலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று (25) பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திறைசேரியின் வெவ்வேறு பிரிவுகளில் 26 வருட காலத்துக்கு அதிகமான சேவை அனுபவம் உடைய இவர் இதற்கு முன்னர் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேல்திகாரியாகவும் கடமையாற்றி இருக்கின்றார்.
அத்துடன் அவர் வியாபார மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றி இருக்கின்றார்.
அவர் ஜயவர்தனபுர பல்கலைக்கழக்தின் முகாமைத்துவ பட்டம், அவுஸ்திரேலியாவின் பிலிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அபிவிருத்தி பற்றிய முதுமாணிப் பட்டம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார அபிவிருத்தி பற்றிய பட்டப் பின் டிப்ளோமா, ஜப்பான் அபிவிருத்தி பொருளாதார நிறுவனத்தின் அபிவிருத்திப் பொருளாதாரம் பற்றிய பட்டப் பின் டிப்ளோமா ஆகிய தகமைகளைக் கொண்டிருக்கிறார்.
0 comments :
Post a Comment