கல்முனை ஆதார வைத்தியசாலையில் 30 வருட தாதிய சேவையைப் பூர்த்தி செய்து ஓய்வு பெறும் காரைதீவைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் கந்தசாமி சிவநாதனுக்கு நேற்று பிரியாவிடை நிகழ்வு வைத்தியசாலையில் நடந்தது .
வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ரங்கே சந்திரசேன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் எம். சமீம் நிருவாக உத்தியோகத்தர் ரி.தேவஅருள் தாதியபரிபாலகர் ரி.சசீந்திரன் உள்ளிட்ட பலரும் பாராட்டி உரையாற்றினார்கள்.
திரு. சிவநாதன் கடந்த முப்பது வருட காலமாக பல பிரிவுகளில் கடமையாற்றி இறுதியாக சத்திர சிகிச்சை பிரிவில் பொறுப்பு தாதிய உத்தியோகத்தராக சேவை ஆற்றியதை ஒட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி பரிசுகளும் வழங்கப்பட்டன.
வைத்தியசாலை ஊழியர்கள் நிகழ்வில் கலந்து பாராட்டினர்.
0 comments :
Post a Comment