சாய்ந்தமருது ஜனாஸா மக்கள் பேரவையின் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க ஹரீஸ் எம்.பி நிதி ஒதுக்கீடு !



நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது பிரதேசத்தில் வினைத்திறனாக செயல்படும் அமைப்புக்களில் ஒன்றான சாய்ந்தமருது ஜனாஸா மக்கள் பேரவையின் எதிர்கால வேலைத்திட்டங்களை சிறப்பாக செய்யும் நோக்கில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணம் பேரவையின் தலைவர் ஏ.எஸ். அஸ்வர் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது ஜனாஸா மக்கள் பேரவை காரியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
 
ஸ்தாபிக்கப்பட்டு சில வருடங்களாக சிறப்பாக இயங்கிவரும் இந்த சாய்ந்தமருது ஜனாஸா மக்கள் பேரவை பல்வேறுபட்ட சமூக நல வேலைத் திட்டங்களையும், மார்க்க விடயங்களையும் முன்னெடுத்து வருகிறது. அவர்களின் பணியை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த நிதி ஒதுக்கப்பட்டதாக இங்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் ஜனாஸா மக்கள் பேரவையின் ஆலோசனைக் குழுத்தலைவரும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது - மாளிகைக்காடு கிளையின் தலைவர் மௌலவி எம்.எம். எம். சலீம் (ஷர்க்கி), பேரவையின் பொதுச் செயலாளர், யூ.கே. காலித்தீன், பொருளாளர் எஸ். எம். நஸீர், ஆலோசனை குழு உறுப்பினர்களான ஏ.எச். ஜிப்ரி, எம்.எல்.எம். றிபாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஏ.பி.நௌபர், ஜனாஸா மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :