புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் தேசிய சுற்றாடல் ஒன்றியம்



பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தலைமையிலான தேசிய சுற்றாடல் ஒன்றியம், இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகார சபையின் (SLSEA) தலைவரிடம் அண்மையில் அறிக்கை ஒன்றை கையளித்துள்ளது.

போதிய சூரிய ஒளி, உயிரியல் கழிவுகள், காற்றாலை, நீர் மூலங்களைக் கொண்ட இலங்கையானது, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்வதற்கான முக்கிய ஆற்றல்களைக் கொண்டுள்ளது என்பதை, அவர்கள் இந்த அறிக்கையில் வலியுறுத்துகின்றனர். இந்த இயற்கை வளங்களை வலுசக்திக்காக பயன்படுத்த நாட்டின் புவியியல் அமைவிடம் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. ஆயினும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையானது, புதிய தொழில்நுட்பங்களின் பற்றாக்குறை, போதிய அளவில் புதிய திட்டங்களின் ஸ்தாபிக்கப்படாமை மற்றும் நிலையற்ற நிதி உள்ளிட்ட முக்கிய சவால்களை எதிர்கொள்கிறது. நாட்டின் சமீபத்திய மின்சாரத் தடை மற்றும் தற்போதைய மின்சார பிரச்சினைகளால் இந்த சிக்கல்கள் மேலும் அதிகரித்துள்ளதோடு, இது பொருளாதாரத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சவால்களை எதிர்கொள்ளவும், புதிய புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டங்களில் முதலீட்டை ஊக்குவிக்கவும், ஆக்கபூர்வமான உத்திகள், சிறந்த திட்டங்கள், புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், தனித்துவமான ஊக்குவிப்புத் தொகைகள் உள்ளிட்ட விடயங்களை உருவாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும். இந்த நடவடிக்கைகளானவை நுகர்வோர் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதை ஊக்குவிக்கும் என்பதுடன் இத்துறையின் வளர்ச்சியை துரிதப்படுத்தும்.

தெளிவான பலன்கள் இருந்தபோதிலும், பல்வேறு குறுகிய நோக்கங்களை நியாயப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டங்களைத் தடுக்கவும், தாமதப்படுத்தவும், சுயநலம் கொண்ட சில குழுக்கள் முயன்று வருவதாகவும் இந்த அறிக்கையில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மீள் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டங்களை ஊக்குவிப்பதற்கும் அவற்றை முன்னே கொண்டு செல்வதற்கும் தேசிய சுற்றாடல் ஒன்றியம் உறுதியாக இருந்து வருகிறது. குறிப்பாக இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடிக்கு மத்தியில், அவர்கள், உள்ளூர் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் ஆதரிப்பதற்கும் உறுதி பூண்டுள்ளதோடு, வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.

மன்னார் மற்றும் பூநகரிக்கு இடையில் 500 MW காற்றாலை மின்சக்தித் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளமை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த திட்டத்திற்கு பல்வேறு காரணங்களால் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பைத் குறைக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டால், இந்தத் திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமென, தேசிய சுற்றாடல் ஒன்றியம் எதிர்பார்க்கிறது.

ENDS
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :