கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் களணி கங்கை பெருக்கெடுத்ததால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மல்வானை பகுதிக்கு விஜயம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
தொடராக பெய்த கடும் மழை காரணமாக களனி கங்கை பெருக்கெடுத்து மல்வானை ரக்ஸபான பகுதி நீரில் மூழ்கியுள்ளமையினால் பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உரிய இடத்துக்கு விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டதுடன் ரக்ஸபான பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்ற கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்.

தொடராக இப்பகுதி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படுவதனால் இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமாக தேவைப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அவர்களுக்கான இழப்பீடுகள் சம்பந்தமாகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தனது உயர்தர கல்வியினை மல்வான அல் முபாறக் தேசிய கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :