கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய ஒன்றியத்தின் ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பிக்கும் முகமாக நேற்று வெள்ளிக்கிழமை (21) கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் கூட்ட மண்டபத்தில் ஹஜ் பெருநாள் கவியரங்கு தம்பி மரைக்கார் அரங்கில் அதிபர் எஸ்.எம் அறூஸ் தலைமையில் நடைபெற்றது. இக் கவியரங்கில் 8 கவிஞர்கள் கவி பாடினார்கள். எச்.எம். சுஜப் (கவிப்புயல்), எஸ்.எச்.எம் நவ்பர், ஜீ.குணசேகரன், எஸ்.சுப்ரமணியம், எம்.எம்.எம். ரவூப், பாத்திமா பர்வின் எம்.ரீ.றிபாஸ் மௌலவி, எம். கேஷினி மோகனதாஸ் ஆகியோர்கள் மேடையில் கவிதைகள் அழகாக பாடினார்கள். இதில் விசேஷம் அம்சம் என்னவென்றால் மூன்று தமிழ் இனக் கவிஞர்கள் பெருநாள் கவிதையில் நபி இப்ராஹீம், இஸ்மாயில் போன்ற வரலாறுகளை கவிகளை பாடினார்கள்.
இந்நிகழ்வுக்கு தினகரன், தினகரன் வாரமஞ்சரி ஊடக அனுசரனை வழங்கியிருந்தது. சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம் மற்றும் அஷ்ரப் ஏ சமத் ஆகியோர்களுடன் அல் அக்ஸா பாடசாலை உப அதிபர்,ஆசிரியர்கள் இலக்கியவாதிகள் கலந்து சிறப்பித்தனர்..
.jpg)

0 comments :
Post a Comment