மாளிகைக்காடு அல் ஹுசைன் பாடசாலை கட்டிட நிர்மாணத்துக்கு முடிந்த அளவு உதவுவேன்.- முஷாரப் எம்.பிசுனாமியால் பாதிக்கப்பட்டு இடம்மாறி இயங்கிவரும் மாளிகைக்காடு அல் ஹுசைன் பாடசாலையின் மாணவர்களுக்கான இட தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் பொருட்டு, நீண்ட காலத்துக்கு முன்னர் அத்திவாரமிடப்பட்டு கிடப்பில் விடப்பட்டுள்ள, அந்த கட்டிட மீள் நிர்மான பணிக்குத் தேவையான நிதியை திரட்டி குறித்த கட்டிடபணிகளை ஆரம்பிக்க தேவையான முன்னெடுப்புக்களை செய்வதாக காரைதீவு பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பிருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் தெரிவித்தார்.

மாளிகைக்காடு அல் ஹுசைன் பாடசாலையின் முற்றத்துக்கு மண் நிரப்பி, அழகு படுத்துவதற்காக காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் உதவித்தலைவரும் ஜாஹீர் பௌண்டேசன் மற்றும் சமூக அபிவிருத்தி சபையின் ஸ்தாபக தலைவருமான ஏ.எம். ஜாஹீர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து செய்துமுடிக்கப்பட்ட 04லட்சம் ரூபாய்க்கான ஆவணங்கள் கையளித்து குறித்த வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை பார்வையிடும் நிகழ்வும் பாடசாலை சமூகத்துடனான சந்திப்பும் அதிபர் ஏ.சி.எம். நளீம் தலைமையில் 2024.06.11 ஆம் திகதி பாடசாலை நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலையின் இடப்பிரச்சினை என்பது விரைவாக தீர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். கட்டிடத்துக்கு அத்திவாரமிட்டு இவ்வளவு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றால் அது மிகுந்த கவலையான விடயமாகும். குறித்த விடயம் தொடர்பாக எனது இணைப்பாளர் ஜாஹீர் அவர்கள் தொடர்ச்சியாக என்னிடம் கூறிவருகின்றார். சந்தர்ப்பம் கிடைக்கும் போது இந்த பிரச்சினை தீர்ந்து விடும் என்றும் நாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களது நிர்வாகத்தில் மீள் எழுந்து வருவதாகவும் காலப்போக்கில் நாடு நல்ல அடைவுகளை எட்டும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வின்போது கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர்களில் ஒருவருமான ஏ.எம். அஷாம் மெளலவி, பிரதி அதிபர்களான திருமதி ஆர்.எம். உவைஸ் மற்றும் எம்.எஸ்.எம். சாதிக் உள்ளிட்டவர்களுடன் ஆசிரியர்கள் பாராளமன்ற உறுப்பினரின் மேலதிக இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :