சமூக சேவைக்கான தமிழன் விருதை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெறுகிறார்.குறுகிய காலத்துள் மிகப்பிரபல்யம் பெற்று, தமிழ் பத்திரிகைகளில் தனக்கென்று தனியிடத்தை பெற்று விளங்கும் தமிழன் பத்திரிகை, அண்மையில் தனது ஐந்தாவது ஆண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. இந்நிகழ்வின்போது பலர் கௌரவிக்கப்படவுள்ளனர். இதில் மிகப்பிரபல்யம் மிக்க சமூகசேவகர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள், சமூக சேவைக்கான தமிழன் விருதைப் பெறவுள்ளார்.

புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் குட்டியானா என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள பாடலியா என்ற தனித்துவமான நகரில் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 10 இல் பிறந்தார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது 06 மாத குழந்தையாக தனது குடும்பத்துடன் இலங்கைக்கு குடிபெயர்ந்தார்.

இவர் ஆரம்ப காலங்களில் கேகாலை பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் 1970 க்கு பின்னர் கொழும்பில் வாழ்ந்து வருகிறார். கடுமையான உழைப்பாளியான இவர், பல்வேறு தொழில்களைச் செய்து வாழ்வில் முன்னேறியுள்ளார்.

1994 ஆம் ஆண்டுமுதல் நூல்களின் முதல் பிரதிகளைப் பெற்று எழுத்தாளர்களை ஊக்குவித்தார். 2019 ஆம் ஆண்டு 1000 மாவது பிரதியைப் பெற்றார்.

தனது வாழ்க்கை பயணத்தில் இலக்கியத்தோடு நின்றுவிடாது பல்வேறு சமுகநல திட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அண்மையில் காத்தான்குடி பிரதேசத்தில் மின் இணைப்பைப் பெற்று அதற்கான கட்டணங்களை செலுத்த முடியாது தவித்த பல வீடுகளுக்கு வெளிச்சமூட்ட உதவினார். தற்போது கல்விக்கு கணணியின் அவசியத்தை உணர்ந்து அதனையும் கட்டம் கட்டமாக வழங்கி வருகிறார்.

ஹாசிம் உமர் பௌண்டேசன் என்ற பெயரில் ஓர் பௌண்டேசனை உருவாக்கி அதனூடாக அவர் ஆற்றிவரும் சமூக நல பணிகள் எண்ணிலடங்காதவை அவரது பணி தொடர வாழ்த்தும் அதேவேளை அவரை குறித்த விருத்துக்கு பரிந்துரைத்துள்ள தமிழன் பத்திரிகை நிர்வாகமும் பாராட்டுக்குரியது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :