தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் நலன் கருதி "சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு" ஒன்றை நிறுவ அரசியலமைப்பு ரீதியாக ஏற்பாட்டை செய்ய வேண்டும் : பாராளுமன்றில் ஹரீஸ் கோரிக்கை !நூருல் ஹுதா உமர்-
ல்விசார் நியமனங்களிலும், கல்வி அதிகாரிகள் நியமனங்களிலும் பல பாரபட்சங்கள் நடைபெறுவதாக அறிகிறோம். இது போன்று பல இடங்களிலும் பல்வேறு அசௌகரியங்கள், பாரபட்சங்கள் நடைபெறுகிறது. எமது நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்கள் அவற்றை மேன்முறையீடு செய்யவும், விரைவான தீர்வுகளை பெறவும் "சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு" ஒன்றை நிறுவ அரசியலமைப்பு ரீதியாக ஏற்பாட்டை செய்ய வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் சபையில் கேட்டுக்கொண்டார்.

நேற்று (05) பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அவர்,

இப்படியான ஏற்பாடுகள் இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருக்கிறது. எமது நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் நலன் கருதி "சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு" ஒன்றை நிறுவ பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், மிக நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்தை உருவாக்கித் தருமாறும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சரவை அனுமதியுடன் மாகாண சபைகளினூடாக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வரும் கல்வி அமைச்சு கிழக்கு மாகாணத்தில் கஷ்டப்பிரதேசங்களில் உள்ள ஆசிரிய வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த தேவையை பூர்த்தி செய்ய அண்மையில் கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்திருந்ததும் துரதிஷ்டமாக அந்த நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கூடுதலான ஆசிரியர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளில் நியமிக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :