வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் மல்வத்தே மகாவிஹார அனுநாயக்க அதிமேன்மை தகு விக்ரமராச்சி ஆயுர்வேத பல்கலைக்கழக வேந்தர் நியங்கொட விஜிதசிறி அனுநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த அதிமேதகு தேரர் தங்கள் சிந்தனை போக்கின்படி தேசிய ஒருமைப்பாட்டிற்கு தங்களால் சிறந்த பங்களிப்பை ஆற்ற முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.
ஆளுநர் நஸீர் அஹமட் கருத்து தெரிவிக்கும் போது வடமேல் மாகாணத்தில் தற்பொழுது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க சந்தர்ப்பங்களை வழங்கி அதன் மூலம் பாடசாலைகளிலும் பிரிவினாக்களிலும் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான துரித நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment