ஓட்டமாவடியைச் சேர்ந்த அஹமட் முகைதீன் உசனார் (ஜுனைட்) திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.
மிக நீண்ட காலமாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசத்தில் நிலவி வந்த முஸ்லிம் திடீர் மரண விசாரணை அதிகாரி வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவரான இவர், Demaha Technologies மற்றும் BOOKLAND நிறுவனங்களின் உரிமையாளராவார்.
இவருக்கான, நியமனம் திங்கட்கிழமை (13) நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் வைத்து வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment