திருமண முறிவுகளால் சிதைந்து போகும் குடும்ப கட்டமைப்பினை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு



பாறுக் ஷிஹான்-
திகரித்து வரும் திருமண முறிவுகளும் சிதைந்து போகும் குடும்ப கட்டமைப்புகளும் என்ற தொனிப்பொருளில் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற நீதிபதி ஆதம்பாவா தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முஸ்பிறா நெறிப்படுத்தலில் மகளீர் சங்க உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற மண்டபத்தில் நேற்று (14) மாலை நடைபெற்றது.

இதன் போது விழிப்புணர்வு நிகழ்வில் விசேட உரையினை முஸ்லீம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்னணியின் பிரதிநிதிகளான ஹபிலா மற்றும் ஹஸ்ஸானா உட்பட HEO நிறுவனத்தின் பிரதிநிதிகளாக வை.றினோஸா, எம்.எம் றீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.ஏனைய உரையினை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பெருங் குற்றப் பொறுப்பதிகாரியும் பதில் பொறுப்பதிகாரியுமான றவூப், சாய்ந்தமருது பிரதேச செயலக மகளீர் அபிவிருத்தி கள உத்தியோகத்தராக கடமை புரியும் ஏ.அபிரா, பிரதேச அபிவிருத்தி அமைப்பின் தலைவர் ஐ.ஜாபீர் ,ஆகியோரும் மேற்கொண்டனர்.

அத்துடன் குவாஷி மன்றத்தின் யூரிகளாக கடமையாற்றுகின்ற மௌலவி ஏ.எம்.நாவாஸ், எம்.ஐ.உதுமாலெப்பை ,எம்.எஸ்.றவூஸூக் ,ஏ.எம் சஸ்றீன், ஏ.டபிள்யூ சரோபர், ஏ.எம்.ரசீட் , எஸ்.எல்.றியாஸ், எப்.எப்.அஹானி, ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :