வெள்ளவத்தை மயூரபதி ஆலயத்தில் பூஜை




அஷ்ரப் ஏ சமத்-
ஸ்ரீ சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு இந்தியாவின் புனித சரயு நதியிலிருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்த ஊர்வலம் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை, வெள்ளவத்தை மயூரபதி ஆலயத்தில் காலை பூஜையுடன் ஆரம்பிக்கப்படும்.

இந் பூஜை ஆசிர்வாத நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், இந்திய உயர்ஸ்தாணிகர் கலந்து கொள்வார்கள். அத்துடன் இந்தியாவில் இருந்து ரவிசங்கர் குருக்கள் இலங்கை வருகின்றார் அவருடன் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேபோல் இந்திய பக்தர்களும் வருகை தர உள்ளதாக ஆலய தலைவரும் பாராளுமன்ற உறுப்பிணருமான வி இராதாக்கிருஷ்னன் தெரிவித்தார்.

மேற்படி ஆலய மஹா கும்பாபிஷேக விடயமாக விசேட ஊடக மாநாடு வெள்ளவத்தை மயூரபதி ஆலயத்தில் 07.05.2024 ஊடக மாநாடு நடைபெற்றது. இந் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு வி. இராதக் கிருஸ்னன் பா.உ தகவல்களை தெரிவித்தார் .அத்துடன் மயூரபதி ஆலய தலைவர் சுந்தரலிங்கமும் அ்ங்கு பிரசன்னமாகியிருந்தார்.

மேலும் கருத்து தெரிவித்த இராதாக் கிருஸ்னன்,

இந் மங்களகரமான குரோதி ஞாயிற்றுக்கிழமை 19.05.2024 காலை 09 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் ராமயிரானின் அருளுடன் சீதாபிராட்டியின் ஆசியுடன் நடைபெற உள்ளது. 17.05.2024 வெள்ளிக்கிழமை கிரியாரம்பம் காலை 08மணிக்கும் முதல் கிரையைகள் மாலை கடகஸ்தபனா் யாக பூஜை ஹோமம் ஸ்துாபி தீப யந்திர பம்பஸ்தாபனம் நடைபெறும்.

18.05.2024 எண்ணெய்க்காப்பு அன்றை தினம் அயோத்தி மாநகரின் புனித சரயு நதியிலிருந்து புனித தீர்தக் கலசங்களுடன் காலை 07.00 மணிககு பால்குடா பவனியம் சுவாமி ஊர்வலமும் நுவரெலியா நகரத்திலிருந்து ஸ்ரீ சீதைம்மன் ஆலயத்தை நோக்கி புறப்படும்.

அதே தினம் குமபாபிசேகம் புறக்கோட்டை, செட்டியார் தெரு, அவிசாவலை, ஊடாக யட்டியாந்தோட்டை, கினகந்தேனை, ஹட்டன், கொட்டக்கலை, தலவாக்கலை ,பூண்டுலோயாஈ தவலந்தன்மை சந்தி ஊடாக இறம்போடை ஸ்ரீ ஹனுமான் ஆலயத்தினை சென்றடைந்து முதல் நிறைவடையும்.
18.05.2024 சனிக்கிழமை, அன்று காலை 07.00 மணிக்கு இற்போடை , ஹனுமான் ஆலயத்தில் விசேட பூஜைகளுடன் ஊர்வலம் ஆரம்பமாகி லபுக்கலை நுவரெலியா ஊடாக ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தினை சென்றடையும்.

ஊர்வலம் வருகை தரும் பாதைகளில் பக்தர்கள் மலர் துாவி ஸ்ரீ சீதையம்மன் அருளை பெற்றுக் கொளளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :