ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியோடு கைகோர்த்தனர்.திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தமது ஆதரவை நல்கும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் பல மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான நந்தசேன ஹேரத், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, திருகோணமலை மாவட்டத்ததைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி ஆரியவதி கலப்பதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து மேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட திலிப குமார ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, களுத்தறை மாவட்டத்தில் இருந்து மேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அனில் குமார விஜேசிங்ஹ ஆகியோர் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

அவ்வாறே, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்டத்தில் இருந்து மேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ரெஹென்சிறி வராகொட மற்றும் களுத்துறை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் பிரசன்ன விதானகே ஆகியோரும் நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :