மூதூரில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்



ஹஸ்பர் ஏ.எச்-
மூதூர் பிரதேச செயலகம் மற்றும் மூதூர் சமுர்த்தி பிரதேச அமைப்பும் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றினை இன்று (08) மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி .எம். முபாறக் அவர்களின் தலைமையில் மூதூர் கலாச்சார மண்டபத்தில் நடாத்தியது.

மூதூர் தளவைத்தியசாலையினுடைய வைத்தியர் என். நிப்ராஸ் மற்றும் தாதி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு வைத்திய முகாமை நடத்தி இருந்தார்கள். இதன்போது நீரிழிவு, இரத்த அழுத்தம், தொற்றா நோய்கள், கொலஸ்ட்ரோலுக்கான இரத்த பரிசோதனைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மூதூர் பிரதேச சபையினுடைய செயலாளர், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரச அலுவலகங்களில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :