சரியான பொருளாதார வேலைத்திட்டமும் சரியான பொருளாதாரக் குழுவும் இல்லாத தரப்பினரே பொருளாதார குழுக்களுக்கு இடையிலான விவாதத்திற்கு அச்சப்பட்டுள்ளனர்.-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச



ங்குரோத்தான நாட்டில் நாம் செல்ல வேண்டிய பயணப் பாதை, தொலைநோக்கு மற்றும் வேலைத்திட்டம் குறித்து விவாதமும் நேரிய கலந்துரையாடல்களும் இடம்பெற வேண்டும். இதன் மூலம் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை பரிமாறிக்கொள்ள முடியுமாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் நல்ல நல்ல யோசனைகள் இருப்பதால், அந்த யோசனைகள் மற்றும் ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு, அதன் மூலம் யோசனைகள் முன்வைக்கப்படுவதும், பொது மக்கள் கருத்தாடல் நிகழுவதும் மிகவும் முக்கியமான விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாடு நிதி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வங்குரோத்தடைந்து விட்ட நிலையில் 100 பில்லியன் அமெ. டொலர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சுமையிலிருந்து எமது நாட்டை விடுபடுவதற்கான வேலைத்திட்டம், தீர்வு மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கால அட்டவணை குறித்து கருத்தாடல் நடத்தப்பட வேண்டும். பொருளாதாரத் துறையில் முன்னேற்றம் குறித்து விவாதம் நடத்துவது அபத்தமானது என்று சிலர் கூறுகின்றனர். இரு தரப்பு பொருளாதார குழுக்களுக்குமிடையில் சினேகபூர்வ விவாதத்திற்கு அழைப்பு விடுக்கிறோம். அதனையடுத்து, தலைவர்கள் இருவர்களுக்கும் இடையிலான விவாதத்திற்கு நாளை ஒதுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தான் உட்பட தனது குழுவினர் விவாதங்களில் இருந்து ஒழிந்து ஓட மாட்டோம். பொருளாதார தொலைநோக்கோ, வேலைத்திட்டமோ இல்லாதவர்கள் தான் இத்தகைய விவாதங்களில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். பொருளாதார குழுவும், பொருளாதார வேலைத்திட்டமும் இல்லாதவர்களுக்கு, பொருளாதர குழுவையும், பொருளாதார வேலைத்திட்டத்தையும் தயாரிக்க இந்த விவாதம் உதவ முடியும். எனவே, பொருளாதார குழுக்களின் விவாதம் மற்றும் தலைவர்களின் விவாதம் என இரண்டு விவாதங்களுக்குமான திகதிகளை ஒரே நேரத்தில் முடிவு செய்யுமாறு இறுதியாக ஒரு முறை கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 209 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, முல்கிரிகல, வீரகெடிய ராஜபக்ச மத்திய கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 30 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, பாடசாலை நடன குழுவினருக்கு ஆடைகளைப் பெற்றுக் கொள்ளும் முகமாகவும், பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளும் முகமாகவும் இரண்டு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

🟩 மிகவும் வெற்றிகரமான பொருளாதாரத் திட்டத்தைக் கொண்ட குழு யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

பொருளாதார விவாதம் என்பது இந்நாட்டில் இன்றியமையாத விவாதம் என்பதுடன், இந்நாட்டு மக்கள் மேலும் ஏமாற்றப்படாமல் இருக்க, கல்வி மற்றும் சுகாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பதை முறையாக தெளிவுபடுத்த பொருளாதார குழுக்களிடையேயான விவாதம் அவசியமானதாகும். எனவே, ஊடக காண்பிப்புகளை காட்டுவதை விடுத்து விவாதங்களுக்கான இரண்டு நாட்களையும் ஒரே நேரத்தில் தீர்மானிக்குமாறும், விவாதங்கள் மூலம் பொருத்தமான தீர்வுகளை மக்களுக்கு தெரிவிக்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

🟩 அரச நிதியினால் மாத்திரம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

சுனாமியின் போது எமது நாட்டுப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய வெளிநாடுகளில் உள்ள பாடசாலைகளில் இருந்து பணம் பெற்றுக் கொண்டது போல, அரசாங்க நிதியை மட்டுமன்றி ஏனைய உபாயங்களையும் பயன்படுத்தி கல்வி, சுகாதாரத்துறைகளை மேம்படுத்தலாம். இவை எதனையும் அரசாங்கத்தின் நிதியில் மாத்திரம் தங்கியிருந்து பூர்த்தி செய்ய முடியாது. இதற்கான புதிய வளங்களை கண்டறிய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 பாடசாலைகளுக்கு நாங்கள் வளங்களை வழங்கும்போது பாடசாலையின் பெயர், ராஜபக்சவா, பிரேமதாசவா அல்லது விஜேவீரவா என்று பார்ப்பதில்லை.

எமது நாட்டின் மோசமான அரசியல் கலாசாரத்தில் ராஜபக்சவின் பெயரைக் கொண்ட பாடசாலைகளுக்கு உதவ வேண்டுமா என்று சிலர் கேட்கின்றனர். இதுபோன்ற சம்பிரதாய மோசமான மற்றும் கேலிக்குரிய வாதங்களிலிருந்து நாம் விலகி இருக்க வேண்டும். 100 பில்லியன் டொலர் கடன் சுமையுடன் இருக்கும் வங்குரோத்து நிலையில் உள்ள இந்நாட்டின் பாடசாலைகளுக்கு ஏதாவது நல்லது நேரும் போது, அப்பாடசாலை ராஜபக்ச, பண்டாரநாயக்க, பிரேமதாச, விஜேவீர போன்றோரின் பெயரா சூட்டப்பட்டுள்ளது என்பதை தேடிப் பயனில்லை. நாட்டில் உள்ள 10099 அரச பாடசாலைகளிலும் கல்வி கற்கும் 41 இலட்சம் மாணவர்கள் தொடர்பிலயே நாம் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நாட்டில் உள்ள பாடசாலைகளில் 3,000 பாடசாலைகளில் உயர் தர பாடங்கள் கற்பிக்கின்றன. அவற்றில் 1,000 பாடசாலைகளில் விஞ்ஞானம் மற்றும் கணிதம் கற்பிக்கப்படுகின்றன. இது மொத்த பாடசாலைக் கட்டமைப்பில் 10% ஆகும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பப்பட முடியாது. இந்தியா அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் கூட அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

🟩 இவ்வாறு சென்றால் வேலையில்லா திண்டாட்டம் தான் அதிகரிக்கும்.

தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்துவோம் என நமது நாட்டு தலைவர்கள் கூறினாலும், தரம் 6-11 வரையிலயே தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கப்படுகிறது. இதை மாற்றி தரம் 1-13 வரை ஆங்கில மொழியை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும். இவற்றைச் செய்வதற்கு முன்னர் பாடசாலைகளில் மனித வளம் மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறையை இல்லாதொழிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த கல்வி முறை தொடர்ந்தால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். ஐக்கிய இராஜ்ஜியம் போன்ற நாடுகளில் பட்டதாரிகளைத் தேடி பல்வேறு நிறுவனங்களும் அமைப்புகளும் செல்கின்றன. ஆனால் நமது நாட்டில் என்ன நடக்கிறது? பட்டதாரிகளே வேலை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் தற்போது கிட்டத்தட்ட 50000 பட்டதாரிகள் வேலையின்மையால் அவதிப்பட்டு வருகின்றனர். இறுதியில் பரீட்சையில் தேர்ச்சி பெற்று, பட்டம் பெற்றதன் பின்னரும் அரசியல்வாதிகளின் பின்னால் சென்று வேலை கேட்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது. இதனைப் புரிந்து கொண்டு நல்லதொரு பாதையை நோக்கி பயணிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :