அநீதியான குறைபாடுகளுடன் இன்று (28.05.2024) இடம்பெறவிருந்த கிழக்கு மாகாண பட்டாதாரி ஆசிரியர் நியமனத்திற்கு கல்முனை (மாகாண) மேல் நீதிமன்றம் இடைக்காலத்தடை.



ன்று (28.05.2024) இடம்பெறவிருந்த கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான தெரிவுபட்டியல் நேற்று முன்தினம் (26.05.2024) மாலையே வெளியாகியிருந்த நிலையில் அதில் பல அப்பட்டமான முறைகேடுகள் இருப்பதாக கூறி அநீதியிழைக்கப்பட்ட பல பட்டதாரிகள் தமக்கான நீதியினை பெற்றுத்தருமாறு குரல்கள் இயக்கத்திடம் (Voices Movement ) வேண்டியிருந்தனர். உடனடியாக செயற்பட்டிருந்த குரல்கள் இயக்கம் துரித கதியில் செயற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது சட்டத்தரணிக்ள ஊடாக கல்முனை மேல் நீதிமன்றில் 'ரிற்' (Writ) வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தது.

நேற்று (27.05.2024) கல்முனை மேல் நீதிமன்றில் இவ்வழக்கு அழைக்கப்பட்ட வேளையில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் றாஸி முகம்மட், ஏ.எல்.ஆஸாத், எப்.எச்.ஏ.அம்ஜாட், ஏ.எம்.சாதிர், எம்.எம்.ஏ.சுபாயிர் ஆகியோர பாதிக்கபட்ட பட்டதாரிகள் சார்பாக ;ஆஜராகி தம்பக்க வாதங்களை முன்வைத்திருந்தனர். குறித்த வாதங்களின் நியாயத்தன்மையினை ஏற்றுக்கொண்ட கௌரவ நீதிமன்றம் இன்று (28.05.2024) இடம்பெறவிருந்த கிழக்கு மாகாண பட்டாதாரி ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது.

இதேபோன்று பல்வேறு சமூக விடயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக குரலக்ள் இயக்கம் நீண்டகாலமாக பல்வேறு சட்டப்போராட்டங்களை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :