காத்தான்குடியில் "வினைத்திறன் மிக்க குத்பாப் பேருரைகள்" பயிற்சிச் செயலமர்வு..



அஸ்ஹர் இப்றாஹிம்-
ராபிததுந் நளீமிய்யீன் - நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பின் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் இளம் உலமாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளின் இறுதி வகுப்பு மாணவர்களுக்கான "குத்பாக்களை வினைத்திறனாக நடாத்துதல்" தொடர்பான பயிற்சிப் பட்டறை காத்தான்குடி ஷெய்குல் பலாஹ் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதான வளவாளராக ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் உஸ்தாத். அஷ்ஷெய்க். எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) மற்றும் கொழும்பு அமல் சர்வதேச பாடசாலையின் திறன்விருத்திக்கும் பயிற்றுவிப்புக்குமான பொறுப்பாளர் அஷ்ஷெய்க் ஸப்ரி முஹம்மத் (நளீமி) ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினர்.

அறிமுக உரையினை ராபீதத்துன் நளீமிய்யீன் காத்தான்குடிக்கிளை பொறுப்பாளர் அஷ்ஷெய்க் எம். எஸ். எம் நுஸ்ரி (நளீமி) நிகழ்த்தியதோடு குத்பாக்களுக்கான தலைப்பை தெரிவு செய்தலும், வினைத்திறன் மிக்க குத்பா முன்வைப்பும், காலத்திற்கேற்ப குத்பாக்களை ஒழுங்குபடுத்துவதன் அவசியமும் உலமாக்களின் பங்களிப்பும் ஆகிய தலைப்புகளில் விரிவுரைகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட 50 கதீப்மார்களுக்குமான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு ஸகாத் தொடர்பான மாதிரி குத்பாக்களை கொண்ட நூலும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :