இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும்.-டாக்டர் கியாஸ் சம்சுடீன்


தொடர் 18A
இலங்கை மருத்துவக் கல்லூரியின் தொடக்க கால துறைகளும் கற்கை நெறிகளும்.
1870 இல் ஆரம்பிக்கப்பட்ட "Ceylon Medical College" கல்லூரியில் இரண்டு துறைகள் இருந்தன :-
I. மருத்துவத் துறை.
II. மருந்தகங்கள் துறை.
1. மருத்துவத் துறை இரு வகை பாடநெறிகளை கொண்டிருந்தது .
a) L.M.S. Ceylon

பொதுக் கல்வியில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரி
ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய முன் மருத்துவத் தேர்வின் சித்தியின் தகுதி வரிசைப்படி ஆண்டொன்றிற்கு 50 மாணவர்கள் தெரிவுசெயப்பட்டனர்.

1924 இல் இருந்து கல்வி ஆண்டு அக்டோபர்- டிசம்பர், ஜனவரி - மார்ச், மற்றும் மே - ஜூலை என மூன்று பருவ காலங்களாகப் பிரிக்கப்பட்டு
ஒவ்வொரு கல்வியாண்டுக்கும் ஐந்நூறு ரூபாய் அல்லது ஒவ்வொரு பருவத்திற்கும் நூற்று எழுபது ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது .
இரண்டு கல்வியாண்டுகளின் பின் உடற்கூறியல் மற்றும் உடலியல் பாடங்களில் முதல் நிபுணத்துவத் தேர்வும், 3 கல்வியாண்டின் இறுதியில்
நோயியல்(பாக்டீரியாலஜி அடங்கலாக) , பொது சுகாதாரம், மெட்டீரியா மருத்துவம் மற்றும் மருத்துவ நீதித்துறை ஆகிய பாடங்களில் இரண்டாவது தொழில்முறை தேர்வும் .ஐந்து கல்வியாண்டுகள் நிறைவடைந்த பின்
மருத்துவம், 'அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேற்றியல் ஆகிய பாடங்களில் மூன்றாவதும் இறுதியுமான தொழில் முறை தேர்வும் நடைபெற்றது .தேர்வுக் கட்டணம்130ஆகவும் மூன்று மாத காலத்திற்குள் நடைபெறும் மறு தேர்வுக்கு ஒற்றைப் பாடங்களுக்கு 10ரூபாயும் அனைத்து தேர்வுகளுக்கும் ரூ ,500 என்றுமிருந்தது.

பதிவுக்கட்டணம்,நூலகக் கட்டணம், நுண்ணோக்கி கட்டணம், மீள் பரீட்சைக் கட்டணம், தாமத பதிவுக்கட்டணம் என அனைத்துக்கும் கட்டணம் அறவிடும் முறை வசதிப்படைத்த மாணவர்களுக்கே வாய்ப்பாக இருந்தது. ஆனாலும் சில மாணவர்களுக்கு பெர்ஸறி ஸ்காலர்ஷிப்,மற்றும் சிலோன் "சிலோன் மெடிக்கல்"ஸ்காலர்ஷிப் என இரு வகை ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டன. முன்னையதுசிறந்த ஆரம்ப கல்வித்தகைமையுள்ள 17-21 வயது மாணவர்களுக்கு கல்லூரியில் இரண்டு வருடங்களுக்கு இலவசக் கல்வியைப் பெறுவதற்கும் மற்றையது 1ம் பரீட்சையின் சிறந்த பெறுபேற்றின் காரணமான பரிந்துரையின் அடிப்படையிலும்17-22 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 5 வருடங்களுக்கும் வழங்கப்பபட்டது.

LMS டிப்ளமோ MBBS ஆக மாற்றம் 1942 இல் இலங்கை பல்கலைக்கழகத்தின் கொழும்பு மருத்துவ பீடமாக தரமுயர்தபட்டதும் அதுவரைக்கும் LMS டிப்ளமோவை வழங்கிய மருத்துவக்கல்லூரி MBBS பட்டங்களை வழங்கத்தொடங்கியது.
அந்த வகையில் எமது பிராந்தியத்தின்1923ம் வருடம் LMS டிப்ளோமா பட்டம் பெற்ற முதல் வைத்தியராக சம்மாந்துறை மீராலெப்பை வன்னியாவின் மகன் Dr. ஒஸ்மான் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.(Date of Reg 07.01.1924) மேலும் வெளிநாட்டு மருத்துவ கல்லூரியின்முதல்? முஸ்லீம் மருத்துவர் என்ற பெருமை கொழும்பை சேர்ந்த Dr குழந்தை மரைக்கார் மொஹமட் ஸுபைர் என்பவரை சாரும் இவர் எடின்பரோ பல்கலைக்கழக பட்டதாரி ஆவார்.(இணையத்தில் தகவல் இவ்வாறு இருந்தாலும் இதற்கு முன்பே LMS மற்றும் வெளிநாடுகளில் பட்டம் பெற்ற பலர் இலங்கை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது )
1942 ஆம் ஆண்டில் மருத்துவ பீட நுழைவு,உயர்தர விஞ்ஞான பாடங்களில் அதிகூடிய சித்தி மற்றும் கல்வியை தொடர்வதற்கான நிதி நிலைமை மற்றும் நேர்முக பரீட்சை போன்றவற்றில் தங்கியிருந்தது. பல்கலைக்கழகத்திற்கு தகுதி அடிப்படையில் மட்டும் தெரிவுசெய்யும் நடைமுறை 1964 வரை தொடர்ந்தது. 1964ல் இருந்து நடைமுறைத் தேர்வில் (Practical test) சித்தியடைவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
1968 முதல் 1969 வரை மருத்துவ பீட அனுமதிகள் பரீட்சார்த்திகளால் பெறப்பட்ட மொத்த புள்ளிகளின் அடிப்படையில் மட்டுமே அமைந்தன.1970 இல் மொழி ரீதியான தரப்படுத்தலும் 1971 முதல் 1977 வரை க.பொ.த உயர் தரத்தில் பெற்ற புள்ளிகள்(வெட்டுப்புள்ளி )மற்றும் பரீட்சைக்கு தோற்றிய மொழி மற்றும் மாவட்ட சனத்தொகை ஆகியவற்றின் அடிப்படையிலும், 1978 இல் 30 % அகில இலங்கை தகுதி , 55 % மாவட்ட அடிப்படையிலான தகுதி மற்றும் 15 % கல்வியில் பின்தங்கிய மாவட்டத்திற்கு ஒதுக்கீடு என அறிமுகப்படுத்தப்பட்டது.
1878இற்கும் 1984 இற்கும் இடைப்பட்ட காலத்தில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பின் தங்கிய மாவட்ட மாணவர்கள் அதிகம் பயன் பெற்றனர். 2001 ஆம் ஆண்டிலிருந்து Z-ஸ்கோர் மூலம் பல்கலைக்கழகம் அனுமதி தீர்மானிக்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் உயர் தர மாணவர்கள் 4 பாடங்களை எடுக்க வேண்டியிருந்தது . 2001 இல் விலங்கியலும் தாவரவியலும் ஒன்றிணைந்து உயிரியலாக மாறி 3 பாடங்களானது.
1942 இல் மருத்துவ பீடத்தில் உடலியல், உடற்கூறியல், நோயியல், மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய ஆறு துறைகள் இருந்தன. பொது சுகாதாரம் (சமூக மருத்துவம்) மற்றும் தடயவியல் மருத்துவம் ஆகிய துறைகள் முறையே 1949 மற்றும் 1951 இல் சேர்க்கப்பட்டன. உயிர்வேதியியல் மற்றும் மருந்தியல் துறைகள் நோயியல் துறையிலிருந்து உடலியல், ஒட்டுண்ணியியல் மற்றும் நுண்ணுயிரியல் துறையிலிருந்தும், மருத்துவத் துறையிலிருந்து குழந்தை மருத்துவம் மற்றும் உளவியல் மருத்துவம் ஆகியவையும் பிரிந்தன. 2016 இல், மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ மனிதநேயத் துறைகள் சேர்க்கப்பட்டன. தற்போது 17 துறைகள் உள்ளன.
1995 ஆம் ஆண்டில் MBBS பாடத்திட்டம் மாற்றப்பட்டது, மேலும் தற்போதைய பாடத்திட்டம் அடிப்படை அறிவியல், பயன்பாட்டு அறிவியல், மருத்துவ அறிவியல், நடத்தை அறிவியல் மற்றும் சமூக ஸ்ட்ரீம் ஆகிய 5 ஸ்ட்ரீம்களைக் கொண்டுள்ளது. மேலும் 2016 இல் இணைந்த சுகாதார அறிவியல் துறை உருவாக்கப்பட்டது.
1870 இல் 25 மாணவர்களாக இருந்த மாணவர் எண்ணிக்கை 60 களில் 500 ஆக உயர்ந்தது. தற்போது சுமார் 1400ஆக அதிகரித்துள்ளது.
ஜூன் 1, 1970 அன்று கொழும்பு மருத்துவ பீடம் தனது நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடியது. இன்று, மருத்துவ பீடம் நாட்டின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்களில் முதன்மையானது.
("பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல்" என்ற எனது முன்னய பதிவை பார்வையிட முதலாவது பின்நூட்டத்தை பார்க்கவும் )
தொடரும்.....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :