அடையாளம் காணப்படாத நபரொருவரின் உடல் நேற்று (2) ஓட்டமாவடி - மஜ்மா நகர் கொவிட் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரெவரி மாதம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 60 வயது மதிக்கத்தக்க நபரொருவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
குறித்த நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த நிலையில் உடல் நீண்ட நாட்களாக அடையாளம் காணப்படாமல் வைத்தியசாலை குளிர்காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
குறித்த நபரின் உடலை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் வைத்தியசாலையிலிருந்து எடுத்து, வாழைச்சேனை பொலிஸார், கிராம உத்தியோகத்தர் எம். அஸ்வர் ஆகியோரின் மேற்பார்வையில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு அல் - கிம்மா பணிப்பாளர் எம்.எம்.ஹாரூன் ஸஹ்வியினால் தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
0 comments :
Post a Comment