சம்மாந்துறையில் 2030 இல் யாவருக்கும் உறையுள்!



ம்மாந்துறை பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களின் உறையுள் தேவைக்காக OCD அமைப்பின் தலைவரின் எண்ணக்கருவில் உருவான "யாவருக்கும் உறையுள் - 2030" எனும் தொனிப்பொருளில் நிர்மானிக்கப்படவுள்ள 13 ஆவது வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (13) மலையடிக்கிராமம் 4 அல்-அக்ஷா பள்ளிவாசல் மஹல்லாவுக்குட்பட்ட பகுதியில் அமைப்பின் செயலாளர் சரோஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவரும், விஞ்ஞான முதுமானியும், சமூக செயற்பாட்டாளருமான அஸ்மி யாஸீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து அடிக்கல் நாட்டிவைத்தார்.

இந்நிகழ்வில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியியலாளர் நஸீர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் றியாஸ், தொழிநுட்ப உத்தியோகத்தர் மொஹம்மட் தம்பி, நூர் பள்ளிவாசல் தலைவரும், அமைப்பின் ஆலோசகருமான அல்-ஹாபிழ் றிப்கான், சம்/மத்திய கல்லூரியின் உப அதிபர் பர்ஸான், கணக்காளர் ஜிப்ரி, அஸ்ஸமா வித்தியாலய அதிபர் அபூபக்கர், ஜனாதிபதியின் இளைஞர் விவகார அமைப்பின் உறுப்பினர் பாஸித், OCD அமைப்பின் செயலாளர் பெரோஸ் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :