மருதமுனை பாடசாலைகளின் மேம்பாட்டு பேரவையின் திட்ட முன்னெடுப்புக்களின் மீளாய்வுக் கூட்டம்



நூருல் ஹுதா உமர்-
ருதமுனையின் கல்வி மேம்பாடு மற்றும் ஒழுக்க சீராக்கம் ஆகிய விடயங்களை முன்னிறுத்தி "மருதமுனை பாடசாலைகளின் மேம்பாட்டு பேரவை" முன்வைத்த விடயங்களின் மீளாய்வுக் கூட்டம் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் தலைமையில் மருதமுனை அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் (21) நடைபெற்றது.

கல்முனை வலயக்கல்வி பணிமனை பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.எச். எம். ஜாபிர், கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், பிரதிக் கல்விப் பணிப் பாளர்களான எம்.எச்.றியாஸா, பீ. ஜிஹானா ஆலிப் உள்ளிட்ட வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளுடன் மருதமுனையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், அதிபர்கள், பிரதி அதிபர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

நோன்பு கால விடுமுறை வகுப்புக்கள் தொடர்பில் இங்கு கலந்தாலோசிக்கப்பட்டதுடன் பேரவையின் அங்குரார்ப்பண கூட்டத்தில் எடுக்கப்பட்ட முதலாவது தீர்மானமான "நோன்பு 20 வரை உயர்தரம் தவிர்ந்த ஏனைய மாணவர்களின் பாடசாலை நேரசூசி வகுப்புக்கள் மதியம் 12 மணிக்கு முன்னர் முடிக்கப்பட வேண்டும்" என்ற விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேற்படி தீர்மானத்தில் 90% க்கும் அதிகமான வெற்றியினை அடைந்திருப்பதாகவும் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகளுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் கூட்டத்தின் தலைவர் வலயக் கல்விப்பணிப்பாளர் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.

12 மணிக்கு முன்னர் முடிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்ட தீர்மானத்திற்கு மாற்றமாக செயற்பட்ட ஆசிரியர்களை அழைத்து கதைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டதுடன் அதற்கென குழுவொன்றும் பிரஸ்தாபிக்கப்பட்டது
உயர்தரம் எழுதுகின்ற மாணவர்களின் குறுங்காலத்தை கருத்திற்கொண்டு ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றமில்லை எனவும் அது தொடர்பில் மாணவர்களின் இயலுமைக்கேற்ப ஆசிரியர்கள் தொழிற்பட வேண்டும் எனவும் மீள வலியுறுத்தப்பட்டது.

மாணவர்களின் நோன்புகால செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெடுப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்மானமொன்றும் மேற்கொள்ளப்பட்டது

12 மணிக்கு முன்னர் வகுப்புக்களை நிறைவுறுத்த வேண்டும் என்பதில்; பாடசாலை நேரசூசிகளை ஒரு நிலைப்படுத்துவதற்கான கலந்தாலோசனை முன்வைக்கப்பட்டு அதிபர்களின் ஏற்றுக் கொள்ளலுடன் கூட்டம் நிறைவுபெற்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :