கல்முனை மாநகர சபைக்கு களப்பாதுகாப்பு காலணிகள் கையளிப்பு.!அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களின் நலன்கருதி ஒரு தொகை களப்பாதுகாப்பு காலணிகளை (Safety Foots) கல்முனை பிராத்திய சுகாதார சேவைகள் பணிமனை வழங்கி வைத்துள்ளது.

இவற்றை கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களிடம் கல்முனை பிராத்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஷகீலா இஸ்ஸதீன் நேற்று வியாழக்கிழமை கையளித்தார்.

இந்நிகழ்வில் பிராத்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பொதுச் சுகாதாரத்துறை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஷாபி, மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், சுகாதாரப் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.எம். பயாஸ், களஞ்சியப் பொறுப்பாளர் கே. மகேந்திர ராஜா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் திண்மக்கழிவகற்றல் சேவையில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பையும் சுகாதார நலன்களையும் கருத்தில் கொண்டு அவர்களது நலத் திட்டத்திற்கு உதவுமாறு மாநகர ஆணையாளர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இப்பாதணிகளை வழங்க பிராத்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதற்காக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள், கல்முனை பிராத்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஷகீலா இஸ்ஸதீன் அவர்களுக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :