ஸ்ரீலங்கா ஜம்மத்தில் உலமா சபையின்பொதுச் செயலாளராக அஷ்ஷேய்க் சதீக் (முப்தி) நியமனம்ம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளராக குருநாகல் மடிகே மிதியாளையை சேர்ந்த அஷ்ஷேய்க் மௌலவி சித்தீக் முஹம்மத் சதீக் (முப்தி ) தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

மேற்படி இந்த நியமனம் ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த மாதம் 10/02/2024 ஜம்மிய்யாவின் க‌ல்முனை தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற போது சபையோரின் பூரண அனுமதியுடன் ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் கலாபூஷணம் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் (மதனி /முப்தி ) அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் நாடளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா சபையின் கிளைகள் விஸ்தரிக்கப்படுவதாகவும் அல்குர்ஆன் சுன்னா முறைப்படி நல்லிணக்கத்துடன் செயற்படும் முஸ்லிம் சமூகத்தின் ஒரு அமைப்பாகவும் இது செய‌ற்ப‌டுவ‌துட‌ன் காதியானிகள், சியாக்கள், அத்துவைத கொள்கைகள் அற்ற, த‌ம்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ளும் அல்குர்ஆன் சுன்னாவை நேசிக்கும் அனைவரும் ஸ்ரீலங்கா ஜமியத்துல் உலமா சபையில் இணைந்து செயல்பட முடியும் என்று ஸ்ரீலங்கா ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் கலா பூசனம் அஷ்ஷைக் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் (மதனி /முப்தி )தெரிவித்தார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :