க.பொ.த சாதாரணதர பரீட்சையில் இனி 7 பாடங்கள்..! புதிய முறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு



க.பொ.த சாதாரணதரத்தில் ஏ, பி, சி பெறுபேறுகளுக்கு பதிலாக மாணவர்களுக்கு ஜிபிஏ (சராசரி புள்ளி) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் வருடாந்தம் க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் க.பொ.த உயர்தர கல்விக்கு தகுதி பெற முடியும் என கல்வி மறுசீரமைப்பு நிபுணர் குழுவின் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாக மட்டுப்படுத்தப்படும். மற்றும் ஏ, பி, சி சித்திகளை முற்றாக நீக்கி, அதற்குப் பதிலாக தரப் புள்ளி சராசரி (ஜிபிஏ) அறிமுகப்படுத்தப்படும்.

இதன் அடிப்படியில் எந்த மாணவரும் பரீட்சை தோல்வியடைபவராக கருத்தப்படமாட்டார்.

விஞ்ஞானம், கணிதம், தாய்மொழி, ஆங்கிலம், சமயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வரலாறு ஆகியவற்றுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சையை பரீட்சைகள் திணைக்களம் 2026 ஆம் ஆண்டு முதல் நடத்தவுள்ளது.

இந்த திட்டம் 2025 முதல் பாடசாலைகளில் தொடங்கப்படும், இந்த மாற்றத்தின் அடிப்படியில் 2026ஆம் ஆண்டு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவர்.

மேலும் ஏ, பி, சி பெறுபேறுகளுக்கு பதிலாக மாணவர்களுக்கு ஜிபிஏ (சராசரி புள்ளி) வழங்கப்படும்.

இந்த புதிய முறையின்படி, ஒவ்வொரு பரீட்சார்த்தியும் ஒரு குறிப்பிட்ட அளவிலான மதிப்பெண்களுடன் தோல்வி மதிப்பெண்கள் இல்லாமல் தேர்ச்சி பெறுவார்கள்.

குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தொழிற்கல்வி பாடங்களை தொடர முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :