வருமான ஏற்றத்தாழ்வினை வைத்து இனவாதத்திற்கும், கலவரங்களுக்கும் இளைஞர்களை பிழையாக வழி நடத்துகின்றனர் : இளைஞர்கள் சந்திப்பில் எஸ்.எம்.சபீஸ் தெரிவிப்புநூருல் ஹுதா உமர்-
குறைந்த வருமானம் கொண்ட அல்லது வருமானம் இல்லாத கிராம மட்ட இளைஞர்களை இனவாதிகள் தமக்கு ஏற்ற வகையில் கலவரங்களை தூண்டவும் பெரும் சேதங்களை ஏற்படுத்தவும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என மத்தியமுகாம் இளைஞர்களுடனான சந்திப்பின் போது அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ் எம் சபீஸ் தெரிவித்தார்.

கிழக்கின் கேடயம் மத்தியமுகாம் கிளை கூட்டம் இன்று இடம்பெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், வளர்ச்சி அடைந்த நாடுகளில் சராசரி வருமானம் சீராக இருப்பதனாலும், வருமான ஏற்றத்தாழ்வு இல்லாமையினாலும் அங்கு இனக்கலவரங்கள் மிகவும் குறைவாகும். அதே நேரம் நாளை செலவுக்கு என்ன செய்வது என்ற பிரச்சினைகள் அங்கே இல்லாமையினால் மற்றவர்களைப் பற்றி சிந்திக்காமல் அவர்களது வாழ்வியல் தொடர்பில் மாத்திரமே மக்கள் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் எமது நாட்டில் தலாவீத வருமானம் இன்மையினால் இளைஞர்களை தமக்கு ஏற்ற வகையில் கலவரங்களை தூண்டுவதற்கும் தகாத வேலைகளில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலை மாற வேண்டுமானால் வருமான ஏற்றத்தாழ்வு களையப்படவேண்டும். அதற்கு இளைஞர்கள் புதிய தொழில்களை உருவாக்குபவர்களாக மாறி பலருக்கு தொழில் வழங்குநர்களாக உருவெடுக்க வேண்டும். அதற்கு அரசில் சிந்தனை ஆக்கம் கொண்டவர்கள் உள்வாங்கப்பட வேண்டும். அதன் மூலம் எமது சமூகம் வளம் பெறும் என அங்கு உரையாற்றும் போது தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :