தொண்டு நிறுவனப் பணியாளர்வீதி விபத்தில்பலிஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
ன்னார்வத் தொண்டுநிறுவனம் ஒன்றின்பணியாளர் ஒருவர் வீதி விபத்தில்பலியானதாக மட்டக்களப்பு– கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை மாலை 21.03.2024 இடம்பெற்றஇந்த வீதிவிபத்துச் சம்பவத்தில், கொம்மாதுறை உமாமில் வீதியைச்சேர்ந்த தம்பிநாயகம்சிறிபாலு என்ற 55 வயதுடைய 3 பிள்ளைகளின்தந்தையான தம்பிநாயகம் சிறிபாலு என்பவரேமரணமடைந்தவராகும். 

இவர் கடமைநிமித்தம் சென்றுமட்டக்களப்பு – பதுளை வீதியால் தனது மோட்டார்சைக்கிளில் வீடுதிரும்பிக் கொண்டிருக்கும்போது முதிரையடி ஏற்றம் எனும் இடத்தில் பழுது பார்ப்புக்காகநிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பைகளை ஏற்றியிறக்கும் திண்மக் கழிவகற்றல்கிடங்கின் லொறியொன்றில் மோதுண்டு ஸ்தலத்திலேயே மரணித்துள்ளார். 

சம்பவ இடத்திற்குச்சென்ற கரடியனாறுபொலிஸார்; விசாரணைகளை மேற்கொண்டனர். சடலம்சட்ட வைத்திய உடற்கூராய்வுப் பரிசோதனைக்காகசெங்கலடி பிரதேசவைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்புபோதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரணவிசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ்ஆனந்தன் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாகபொலிஸார் மேலதிகவிசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :