கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மொழிபெயர்ப்பு தின விழா.



நூருல் ஹுதா உமர்-
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் 2023 விழா மற்றும் கண்காட்சி வியாழன் (21) பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

கலை கலாசார பீட மொழித்துறை ஏற்பாட்டில், துறைத் தலைவர் கலாநிதி ஸ்ரீகருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கலை கலாசார பீட பதில் பீடாதிபதி ஜி. விக்ணேஷ்வரன் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு கல்விக் கல்லூரியின் முன்னாள் உபபீடாதிபதி மனோகரன் அதிதி உரையாற்றியதுடன் கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட பீடாதிபதி பேராசிரியர் சதானந்தன், தொழிநுட்பவியல் பீட பீடாதிபதி பேராசிரியர் மதிவேந்தன் பட்டதாரி கற்கைகள் பீட பீடாதிபதி பேராசிரியர் கென்னடி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது The Student Translator மற்றும் The Translator's Glossary ஆகிய தலைப்புகளில் மென்பிரதி நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியர் அஷ்ரப் நூல் திறனாய்வு உரையை நிகழ்தினார்.

விழாவின் மற்றொரு முக்கிய அம்சமாக நடைபெற்ற மொழிபெயர்ப்பு தொடர்பான விடயங்கள் அடங்கிய கண்காட்சியை கலை கலாசார பீட பதில் பீடாதிபதி ஆரம்பித்து வைத்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும்
இந்நிகழ்வின்போது அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :