கப்சோ ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதான மகாநாட்டில் மூன்று நாட்டு உயர்ஸ்தானிகள் பங்கேற்புபாறுக் ஷிஹான்-
ப்சோவினால் அமுல்படுத்தப்பட்டுவரும் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் "சமாதான மாநாடு" செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட சமூகத்தலைவர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் என பலர் கலந்துகொண்டதோடு கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கிடையிலான சமாதானம், புரிந்துணர்வு, சகவாழ்வு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுக்கட்டுரைகள், பேச்சுக்கள் என்பன இடம்பெற்றது.

மேலும் கப்சோவின் திட்டப்பணிப்பாளர் எ. ஜே காமில் இம்டாட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் அறிமுகத்தினை அம்பாறை மாவட்ட சமூக ஒருங்கிணைப்பை துவங்குவதற்கான பிராந்திய தகவல் மையத்தின் ஆலோசகர் கலாநிதி அஸ்லாம் சஜா நிகழ்த்தப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் கப்சோ நிறுவனத்தின் பணிப்பாளரினால் நிறுவனத்தின் முதலாவது சமாதான தலைவர்களுக்கான விருது ஹாஷிம்,ஜெனிடா மோகன் ( அம்பாறை ) மற்றும் ஹிதயத்துல்லாஹ் (திருகோணமலை ) ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

சிறப்பு பேச்சாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எ.எம்.எம் நெளஷாட் கலந்து கொண்டார் .

கௌரவ அதிதிகளாக இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் சிறி வால்ட் ஜப்பானிய தூதுவர் மிஸுகோஷி ஹிடேக்கி, இலங்கைக்கான தென்னபிரிக்க தூதுவர் சண்டில் எட்வின் ஸ்கல்க் ஆகியோரும் அவர்களது செயலாளர்களும், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா,கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர், மதத்தலைவர்கள், சமூகத்தலைவரகள், கப்சோவின் இளம் ஊடகவியலாளர்கள், கப்சோவின் ஊழியர்கள், தொண்டர்கள் எனப் பலரும் கொண்டனர்.
இம்மாவட்ட வரலாற்றில் முதல் முறையாக மூன்று நாட்டு உயர்ஸ்தானிகள் கலந்து கொண்ட நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :