பாராளுமன்ற சம்பிரதாயம் தெரியாத சபாநாயகர்.-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசற்போதைய பாராளுமன்றத்தின் சபாநாயகர் Erskine May போன்ற சர்வதேச வழிமுறைகளை பாராளுமன்றத்தில் எந்தளவு தூரம் பின்பற்றினார் என்பதில் சிக்கல் நிலவுகிறது. பொலிஸ் மா அதிபர் நியமனம்,

நிகழ்நிலை காப்பு பாதுகாப்பு தொடர்பான சட்டம் உள்ளிட்டவற்றை அவர் கையாண்ட விதம் பிரச்சினைக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் நியமனத்தின் போது, ​​ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு நால்வர் ஆதரவு தெரிவித்ததாகவும், இருவர் நிராகரித்ததாகவும், மேலும் இருவர் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை என்றும் அரசியலமைப்பு பேரவையின் செயலாளர் தலைமையிலான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசியலமைப்பின் 41 (ஈ) பிரிவுக்கு அமைய, அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது, அதனை நிராகரிக்கவும் முடியாது என கூறியுள்ளனர்.இது தான் அவர்களின் பதிவு.

கௌரவ சபாநாயகர் நான்கு வாக்குகள் இடப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் நியமனத்தை அங்கீகரித்துள்ளார். அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் நிறைவு பெற்றதன் பின்னர்,ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வாக்களிக்காதவர்கள் வாக்களித்ததாகவே கருதப்படுவார்கள் என சபாநாயகர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.அவ்வறான அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளதா? அவ்வாறான தீர்மானத்தை அவரால் எடுக்க முடியுமா? ஒன்று அவருக்கு இந்த விடயம் தெரியாமல் இருந்திருக்கலாம்,அல்லது நிறைவேற்று அதிகாரமுடையவரின் கையில் ஜனநாயகத்தை வழங்கும் சூழ்ச்சிக்கு சபாநாயகர் துணைபோயுள்ளார்.இதனை வருத்தத்தோடு தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

பாராளுமன்றத்திலுள்ள யோசனைக்கு ஆதரவாக 85 வாக்குகளும்,எதிராக 65 வாக்குகளும், வாக்களிப்பை தவிர்த்தவர்களின் எண்ணிக்கை 20 என வைத்துக்கொள்வோம்.

இவ்வாறான நிலையில் 85 டன்,20 இணைத்து 85-85 என கூற முடியுமா? இதற்கு பதில் அழியுங்கள் பார்ப்போம். ஜனநாயகத்தை சீரழித்துள்ள பிரதான நபராகவே சபாநாநகர் செயற்பட்டுள்ளார்.

சபாநாயகர் தனது அறுதியிடும் வாக்கை தவறான முறையில் பயன்படுத்தி தற்போதைய பொலிஸ் மா அதிபரை சட்டவிரோதமான முறையில் நியமித்துள்ளார். சபாநாயகர் அரசியலமைப்பு மற்றும் அதன் விதிகளை தெளிவாக மீறியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சபாநாயகருக்கு Yes, No மற்றும் Abstention என்ற 3 வார்த்தைகளின் அர்த்தம் கூட தெரியாது. பாராளுமன்றத்தில் எவ்வாறு வாக்களிக்கப்பட வேண்டும் என்பது குறித்து விடயத்தில் கூட அவருக்கு சரியான புரிதல் இல்லை. வேண்டுமென்றே நிறைவேற்று அதிகாரத்துடன் இணைந்து சட்டவாக்கத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சதியின் பங்காளியாக மாறியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிறைவேற்று மற்றும் சட்டவாக்கம் நீதித்துறைக்கு இடையே தடைகள் மற்றும் மற்றும் சமன்பாடுகள் இருந்தாலும், சபாநாயகர் இந்த தடைகள் மற்றும் சமன்பாடுகளை வேண்டுமென்றே மீறியுள்ளார். கிரிக்கெட் தொடர்பான விவாதத்தில் கூட, சபாநாயகரின் நடந்த கொண்ட விதம் ஏற்புடையதல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :