இயற்கை முறையில் பயிரிடப்பட்ட வேளாண்மை அறுவடை விழாவி.ரி. சகாதேவராஜா-
ம்பாறைமாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் விவசாய உள்ளீடுகள் வழங்கப்பட்டு விளைந்த நெல் அறுவடை விழா நாவிதன்வெளியில் நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 15ம் கிராம வேப்பையடி கிராம குழு உறுப்பினர்கள் 22 பேருக்கு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இயற்கை முறையில் விவசாயத்தை மேற் கொள்வதற்காக விதை நெல் வழங்கப்பட்டு விதைப்பு செய்யப்பட்டது.

அந்த வேளாண்மை அறுவடை விழா பாரம்பரிய முறைப்படி ஆரம்பிக்கப்பட்டு அறுவடை நேற்று முன்தினம் மேற் கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன் தலைமை தாங்கினார்.

மேலும் அமைப்பின் நாவிதன்வெளி கள உத்தியோகத்தர் ராஜினி மற்றும் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்..


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :