மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மஹோற்சவ விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய்வு*மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மஹோற்சவ விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய்வு*


* _பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேவஸ்தான அறங்காவலர் சபையினருடன் நேரில் கலந்துரையாடல்_

எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மஹோற்சவத்தின் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான பிரமித்த பண்டார தென்னகானுக்கும் மேற்படி தேவஸ்தான அறங்காவலர் சபை தலைவர் பி தருவானந்தா தலைமையிலான ஏற்பாடு குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சருக்கும் தேவஸ்தான அறங்காவலர் சபையினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இம்முறை நடைபெற உள்ள மஹோற்சவத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என ஏற்பாட்டுக் குழுவினரால் எதிர்பார்க்கப்படுவதால் எவ்வித தடைகளும் இன்றி பக்தர்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பிலும் விசேட பாதுகாப்பு வழங்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. விஷேடமாக இராணுவம் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சருடன் மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன கமகே எட்டாவது கஜபா படையணியின் கேர்ணல் சில்வா உட்பட கோவில் அறங்காவலர் சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :