பொய்த்துப்போன பழமொழிகளை மாற்றி ஒருமைப்பாட்டுடன் இயங்கும் இளைஞர்கள் உருவாக்கப்பட வேண்டும் : எஸ்.எம். சபீஸ்



நூருல் ஹுதா உமர்-
"கூழ் குடித்தாலும் கூட்டாகாது எலி வளையானாலும் தனி வளை வேண்டும்" என்ற பழமொழிகள் தற்காலத்தில் புதிய தொழில் முயற்சிகளுக்கு பொருந்தாது எனவும் நவீன உலகத்துக்கு ஏற்றவகையில் பல இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து புதிய தொழில் முயற்சிகளை உருவாக்கி பலருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் புதிய முறைகள் உலகில் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. இன்று உலகில் புகழ்பெற்ற நிறுவனங்கள் யாவும் இம்முறையினையே அதிகம் பின்பற்றுகிறது என அக்கறைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

அம்பாரை மாவட்டத்தில் பல ஊர்களிலும் இளைஞர்களை தொடர்ந்தும் சந்தித்து உரையாடி வரும் எஸ்.எம் சபீஸ் இன்றைய இளைஞர் சந்திப்பில் இந்த கருத்தை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நமது இளைஞர்கள் பெரும் பணத்தினை செலவிட்டு வெளிநாடுகளுக்கு சென்று அங்கே மனதுக்கு பிடிக்காத தொழிலை செய்துகொண்டு குடும்பங்களையும் பிரிந்து வாழும் நிலையே காணப்படுகின்றது. அதனால் கல்வி கற்ற இளைஞர்கள் ஒருமைப்பாட்டுடன் இணைந்து புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குபவர்களாக மாறவேண்டும் என தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :