தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து விடை பெறுகின்றது கல்வியின் முதுசம்!



எம்.எம்.எம்.காமில்-
தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் கணக்கியல் துறையின் முதன்மை விரிவுரையாளர்களில் ஒருவரான விரிவுரையாளர் ஏ. ஜமால்தீன் அவர்கள் இன்று (19.02.2024) தனது பல்கலைக்கழக ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

தனது ஆரம்பகால பல்கலைக்கழக சேவையை பல்கலைக்கழக கல்லூரியில் தொடங்கி, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆரம்ப உருவாக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, பின்னாளில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் நிரந்தர விரிவுரையாளராக 15.11.1996 ஆந் திகதி முதல் தன்னை பல்கலைக்கழக சேவையில் இணைத்துக் கொண்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 27 வருடங்களுக்கு மேலாக தனது அளப்பெரிய ஆசிரியப் பணியை சிறப்பாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மேற்கொண்டு பல்வேறுபட்ட மாணவச் செல்வங்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டிய ஒரு பெருந்தகை இவர்.

பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தின் ஆரம்ப காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி; இன்றைய எமது பல்கலைக்கழகத்தின் உயர்வு நிலைக்கு அர்ப்பணித்து பாடுபட்டவர்களில் இவரும் பிரதானமானவராக கருதப்பட்டவர்.
தனது சேவைக் காலத்தில் பல்வேறு பட்ட மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் சார்பான நிகழ்ச்சி திட்டங்களை பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்துச் சென்றவர். அதிலும் குறிப்பாக பல்கலைக்கழகத்தின் தொழில் வள ஆலோசனை நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாளர் மேம்பாட்டு நிலைய பணிப்பாளராகவும் திறம்பட கடமையாற்றியவர்.

தன்னிடம் கற்ற மாணவர்கள் இன்று சர்வதேச மற்றும் நாடளாவிய ரீதியில் பல்வேறுபட்ட உயர் பதவிகள் மற்றும் நிர்வாக துறைகளில் மேலோங்கி இருந்த போதிலும் ஏன் அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் என பல்வேறுபட்ட உயர் நிலையில் தங்களை நிலை நிறுத்திக் கொண்ட போதிலும் அவர்களைப் பார்த்து பெருமிதம் கொள்பவர் இவர்.
தான் பல்கலைக்கழகத்தில் சேவையாற்றிய காலம் வரையில் அனைத்து தரப்பினருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகிக் கொண்ட இவர் மாணவர்களுக்கு நல்ல ஆசனாகவும் தன்னோடு கடமையாற்றிய சக உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனைகள் பல கூறக்கூடிய நல்ல நண்பனாகவும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் தனது கடமைகளை நிறைவேற்றியவர்.

சமூக ரீதியாக பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களையும் குறிப்பாக நிந்தவூர் பிரதேசம் சார் வேலை திட்டங்கள் பலவற்றில் தன்னை அர்ப்பணித்து செயலாற்றியவர் இவர், நல்ல கணவனாக நல்ல தந்தையாக தனது குடும்பத்தையும் தனது குழந்தைகளையும் தன்னிடம் கற்ற மாணவர்களையும் நெறிப்படுத்தியதற்கு இன்றைய அவர்களின் வாழ்வியல் உயர்வுகள் சான்றாக அமைகின்றன.
“ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்! ”- (திருக்குர்ஆன்- 5:32)

என்ற அல்குர்ஆனின் திரு வசனத்திற்கு ஏற்ப தன்னால் முடிந்த கல்விப் பணியை செவ்வனே நிறைவேற்றி இன்று தனது பல்கலைக்கழக விரிவுரையாளர் என்ற பதவியில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.

எல்லாம் வல்ல இறைவன் மகத்துவமிக்க கல்விப் பணியை புரிந்த இந்த ஆசானிற்கு நீண்ட ஆயுளையும் சகல சௌபாக்கியங்களையும் வழங்கி இவரது ஓய்வுக்கு பின்னரான வாழ்வு அமைதியானதும், மேன்மைமிக்கதும், சுபிட்சமானதுமாக இருப்பதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :