இந்தியா அயோத்தியில் இன்று (22) திங்கட்கிழமை இடம்பெறும் ராமர் ஆலய பிரதிஷ்டைக்காக மட்டக்களப்பு இகிமிஷனில் இன்று ராமநாம சங்கீர்த்தனம் நிகழ்வு இடம்பெறும்.
மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜின் வழிகாட்டலில் உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மஹராஜ் இதனை ஏற்பாடு செய்துள்ளார்.
இன்று அயோத்தி ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வை
முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் சிறப்பு ராமநாம சங்கீர்த்தனம் மாலை 6–7 வரை நடைபெற இருக்கிறது.
பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ கேட்டுள்ளார்.
0 comments :
Post a Comment