வெள்ள நிலைமையால் சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி குடியேற்ற திட்ட கிராம மக்கள் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர்.



ஒருபறம் பாம்புகளின் தொல்லை, மறு புறம் முதலைகளின் நடமாட்டம் செய்வதறியாது திண்டாட்டம்

அஸ்ஹர் இப்றாஹிம்-

தொடர்ச்சியாக பெய்யும் அடை மழையினாலும், இங்கினியாகல டீ.எஸ்.சேனநாயக சமுத்திர வான் கதவு திறப்பினாலும் சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி குடியேற்ற திட்ட கிராம மக்கள் சிறு குழந்தைகளோடும், வயோதிபர்களோடும், வலது குறைந்தோருடனும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிராமத்தின் பின் புறமாகவும், கரைவாகு ஆற்றினால் முன் புறமாகவும் பரவும் வெள்ள நீர் முழுக் கிராமத்ததையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது .

கிராமத்தை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல முடியாத நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ள இம்மக்கள் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய சுனாமி அனர்த்தத்தினால் உயிர்கள், உடமைகள் ,குடியிருப்பு மற்றும் தொழில்களை இழந்து வெறும் கையோடு இக் குடியேற்ற கிராமத்தில் குடியேறிய மக்களாகும்.

.மீன்பிடி , விவசாயம் என்பவற்றோடு நாளாந்தம் கூலித் தொழில் செய்து தமது குடும்ப வருமானத்தை பெற்றுக் கொள்ளும் இம் மக்கள் இவ் வெள்ள நிலமையில் தொழிலின்றி இக்கட்டான நிலமைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் கவலையான ஒரு நிலமையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :