கிண்ணியா பிரதேச கலாசார அதிகார சபையின் பதிய நிருவாகத் தெரிவுஎம்.ஏ.முகமட்-
2024 ஆம் ஆண்டுக்கான கிண்ணியா கலாசார அதிகார சபையின் புதிய நிருவாகத் தெரிவு (25) கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

கலாசார அதிகார சபையின் தலைவராக கிண்ணியா பிரதேச செயலாளரும்,உத்தியோகபூர்வமாக கிராம நிர்வாக உத்தியோகத்தரும் (மேற்பார்வை), ஒருங்கிணைப்பாளராக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தரும் யாப்பின் பிரகாரம் செயற்படுவர்.ஏனைய நிறைவேற்று உறுப்பினர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப் பட்டனர்.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி அவர்கள் தலைவராகவும்,உத்தியோகபூர்வமாக கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.ஆர்.நிஜாம்தீன் (மேற்பார்வை),கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எம்.ஹில்மி ஒருங்கிணைப்பாளராகவும், எம்.எம்.எம்.தௌபீக் (ஓய்வு நிலை ஆசிரியர்).உப தலைவராகவும்,என்.இஜாஸ் செயலாளராகவும்,எம்.ஏ.முகமட் உப செயலாளராகவும்,வை.தினேஷ்காந் பொருளாளராகவும்,எம்.சி.சபருள்ளா (சட்டத்தரணி),ஆர்.சதாத் (ஆசிரிய ஆலோசகர்),எம்.சி.கலீபதுல்லா ஆகியோர் ஆலோசகராகவும்,பி.எம்.றக்கீஸ்,எஸ்.எப்.இன்காம்,எம்.எஸ்.எம்.சப்ரி ஆகியோர் உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப் பட்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :