அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என - மனுஷ நாணயக்கார உறுதிவாக்குகளை எதிர்பார்த்து எந்தொரு முடிவுகளும் எடுப்பது இல்லை
இதுவரை எடுக்கப்பட்ட தீர்மானங்கள் யாவும் தேர்தலை குறிவைக்காமல் மக்களின் நன்மைக்காவும்,எதிர்கால பொருளாதார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களே போட்டியிடுவார்.

என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிட்ட அமைச்சர், இந்த நாட்டின் பொருளாதார நிலைமையை சீர்செய்யும் திறன் தற்போதைய ஜனாதிபதிக்கே உள்ளது எனவும் குறிப்பிட்டார் .

காலி ஹபராதுவ பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் (11) நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதரத்தை நிலைநாட்ட முடியும். எனவே, பொருளாதாரத்தை முன்னேற்ற நினைக்கும் அனைவரும் அவருடன் இணைந்து கொள்வர்.

எதிர்காலத்தில் எப்படி போட்டியிடுவது என்பதை நாங்கள் தீர்மானிப்போம் . எவ்வாறான ஏற்பாடுகள் இருந்தாலும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார்.

தற்போதைய நிலையைப் போன்று ஒரு நிலை இருந்தாலும் நாங்கள் வாக்குகளுக்காக எந்தொரு நிவாரணங்களையும் வாங்கவில்லை .வாக்குகளை எதிர்பார்த்து இருந்தால் இவ்வாறு வரிகளை விதிக்க முடியாது. நாங்கள் இவ்வாறான முறைமையை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதனால் சில வழக்கறிஞர்கள் எமக்கு எதிரே கோசம் எழுப்புகிறார்கள் .ஆனால் நாட்டின் நலனுக்காக நாம் செய்யும் விடயங்களை ஒருபோதும் அரசியலாக்கியது இல்லை

நாங்கள் மீண்டும் பணத்தைச் அச்சடிக்கவில்லை , அதனாளே நாங்கள் வரியை விதித்து இருக்கிறோம் . இவை அரசியல் ரீதியாக பாதகமானவை. எனவே உள்ளவர்களிடம் வரியைப் பெற்று அனைவரும் வாழக்கூடிய சூழலை உருவாக்க நாங்கள் செயல்படுகிறோம் .

நாட்டின் பொருளாதாரம் மேம்படும் போது மக்களுக்கு வரி குறைக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் .
மேலும், ஐ.எம்.எப்-க்குக் கடனை காலம் தாழ்த்தி மீளச்செலுத்தலாம் , என் ஆட்சி அதிகாரத்தை வேண்டுபவர்களின் எவ்வாறு நாட்டை ஒப்படைப்பது.
எனவே நாட்டின் எதிர்காலத்தைகட்டியெழுப்ப அவர்களுக்குத் தெரியாது.

அப்படியென்றால் அவர்களும் நமது பொருளாதார திட்டத்தை செயல்படுத்துகிறார்கள், ஏன் வாக்கு கேட்கிறார்கள். எங்களைப் போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டால், மக்களின் பணத்தை வீணடித்து, ஓட்டு போட்டு பயனில்லை. இவர்கள் பொய்களை கூறி அதிகாரத்தை பெற முயற்சிக்கின்றனர்.

மக்களின் பணத்தை வீணடித்து, தேர்தலை வைப்பதில் பயனில்லை . இவர்கள் பொய்களை கூறி அதிகாரத்தை பெற முயற்சிக்கின்றனர்

எமது மக்கள் வெளிநாட்டுக்கு வேலைகளுக்குச் செல்லும் போது எதிர்க்கட்சித் தலைவர் வெளிநாட்டு வேலைகளை சுனாமி என்று கூறுகிறார்.

தென் கொரியாக்கு வேலைக்கு செல்பவர்கள் நாடு திரும்பிய பிறகு, அவர்கள் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி புதிய தொழில்களை உருவாக்கினர் இது அவருக்குப் புரியவில்லை ,

மார்ச் மாதத்திற்குள் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கின்றோம் . இங்கு பொருளாதாரம் வலுவாக இருப்பதால்தான் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மற்றபடி எந்தொரு நிலையிலும் தேர்தலை எதிர்பார்த்து சலுகைகளை வழங்கவில்லை

நான் கொடுப்பனவுகளை அதிகரிக்க விரும்பியதனாலே ஜனவரி முதல் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்தேன் ,
எனவே அதிகரித்த பத்தாயிரத்தை பிப்ரவரி முதல் வழங்க ஏற்பாடு செய்வோம்.
மருத்துவர்களுக்கான கொடுப்பனவு குறைவாக உள்ளதால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதையும், இந்நாட்டில் சுகாதாரத்துறை வீழ்ச்சியடைவதையும் தடுக்கும் வகையில் வைத்தியர்களுக்காண கொடுப்பனவை வழங்க தீர்மானித்தோம் .

அதுபோன்று பல்கலைக்கழக ஆசிரியர்களின் உதவித்தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அவர்களும் நாட்டை விட்டு வெளியேறினால் நாட்டின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும்

இந்த ஆண்டுக்கு தொழில்முனைவோரின் ஆண்டு என பெயரிட்டுள்ளோம். வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு இலங்கைக்கு திரும்பிய தொழில்முனைவோரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

பணம் இல்லாததால் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என திறைசேரி கூறுகிறது.
அரசின் இலாபத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் திறைசேரி அதிகாரிகளுக்குப் பிடிக்காதல் VAT இல்லாதொழிக்க முயச்சிக்கிறார்கள்

அண்மையில் மோட்டார் வாகன ஆணையர் திணைக்களத்தின் வருவாயை அதிகரிக்க முன்மொழியப்பட்ட திட்டம் சுமார் 15 மாதங்கள் கடந்த பின்னரே செயல்படுத்தப்படுகிறது. தற்போது அத்திணைக்களத்தின் வருமானம் 300 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :