அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் அனுமதியைப் பெறுவது கட்டாயம் --பிரசன்ன ரணதுங்க
Ø தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் அனுமதியைப் பெறுவது கட்டாயம்…

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

Ø ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலர் செய்த செயல்களின் பின் விளைவுகளைப் பொறுப்பேற்பது எங்கள் தலைகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது...

Ø 'செமட்ட நிவஹன' திட்டத்தின் கீழ் 15,000 வீட்டுக் கடன்கள் மார்ச் மாத தொடக்கத்தில் ஆரம்பம்...

Ø அதிகாரிகள் ஆசனங்களை சூடாக்கிக் கொண்டிருக்காமல் வேலை செய்யுங்கள்…

Ø இந்த ஆண்டு முதல் கடன் அறவிடும் 85% இலக்கை எட்டுவது கட்டாயமாகும்..

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தலைவர், ரஜீவ் சூரியாராச்சி

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் அனுமதியைப் பெறுவது கட்டாயம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செயல்களைச் செய்வதன் மூலம் திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்று அவர் வலியுறுத்துகிறார்.
பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் நிறுவனத்தில் நேற்று (29) நடைபெற்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அனைத்து மாவட்ட முகாமையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கடந்த வருடம் மாவட்ட மட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் இவ்வருட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் இலக்குகள் மற்றும் வீட்டுத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி பின்வருமாறு தெரிவித்தார்.

“தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையைச் சேர்ந்த சில அதிகாரிகள் மற்றவர்களின் காணிகளில் வீடுகளை நிர்மாணித்துள்ளனர். தற்போது அந்த அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனர். அப்போது, இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாம் தான் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். டொரிங்டன் வீட்டுத் திட்டத்திற்கும் இதைப் போன்றுதான் செய்துள்ளது. இப்போது அந்த ஆட்கள் ஒரு கோடியே எண்பது இலட்சம் கிளைம் கேட்கிறார்கள். அதை செலுத்த நாங்கள் பணிப்பாளர் சபையின் அனுமதியை வழங்குவோம். இன்றைக்கு ஏன் அந்தத் தொகையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்? ஏனெனில் அந்த அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாக செய்யவில்லை. அவர்களிடம் சோதனைகள், அவதானிப்புகள், சுற்றறிக்கைகள் எதுவும் இல்லை.

டொரிங்டன் வீடமைப்புத் திட்டத்தில் பணம் செலுத்தி வீடுகளை வாங்கியவர்களிடம் இன்னமும் வீட்டுரிமைப் பத்திரங்கள் இல்லை. வீட்டுரிமைப் பத்திரங்களை பெற வரும் போது தான் இந்த பிரச்சினை குறித்து மக்களுக்கு தெரிய வருகிறது. இதுபோன்ற விஷயங்களுக்கு மனு கொடுக்க யாரும் இல்லை. வேலைக்குப் போகும்போது எத்தனை மனுக்கள் அடிப்பார்கள்?

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் சொத்துக்களின் பகுதி நடைமுறை சாத்தியமான வகையில் செயல்பட வேண்டும். அதேபோல் நடைமுறிக்குச் சாத்தியமான முடிவுகளை எடுக்க வேண்டும். சிலர் அதிகார சபைக்கு இலாபம் கிடைக்கக்கூடியவாறான வேலைகள் நடக்கும் பொழுது சுற்றறிக்கைகளை வெளியே எடுக்கிறார்கள். ஆனால் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும் பொழுது எந்த சுற்றறிக்கையும் இல்லை. நிறுவனத்தின் நிர்வாக செயறபாடுகளின் போது எவ்வளவு முறைகேடுகள் நடைபெறுகின்றது. இந்த வேலையில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆசனங்களை சூடாக்கி சூடாக்கி ம்ட்டும் இருக்க வேண்டாம். அதிகாரிகள் முடிவுகளை எடுங்கள். இந்த வருடத்தில் இருந்து கடன்களை அறவிடும் இலக்கு 85% என்ற இலக்கை கட்டாயமாக அடைய வேண்டும்.

'செமட்ட நிவஹன' திட்டத்தின் கீழ் 15,000 வீட்டுக்கடன்கள் மார்ச் முதல் வாரத்திற்குள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் 50,000 குடும்பங்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்பம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் கே.ஏ. ஜானக தெரிவித்தார்.

சொத்து முகாமைத்துவம், கடன் தவணை அறவிட ல், வீட்டு அபிவிருத்தி, பத்திரம் வழங்குதல், பிரிவு சாராத திட்டங்கள் என பல விஷயங்கள் மாவட்ட அளவில் தனித்தனியாக உரையாடப்பட்டது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பொது முகாமையாளர் கே.ஏ. ஜானக, பிரதி பொது முகாமையாளர்கள், மாவட்ட முகாமையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :