அம்பாறை மாவட்டத்தில் இடைவிடாது மழை பெய்து வெள்ளம் போட்டாலும் தடையன்றி தமது கடமையை முன்னெடுத்துச் செல்லும் நகர சுத்திகரிப்பாளர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.



அஸ்ஹர் இப்றாஹிம்-
திடீர் அனர்த்தம் மற்றும் காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளின் போது மனங்கோணாமல் தமது தொழிலை மேற்கொள்ளும் ஒரு சுமூகமாகத் செயற்படும் நகர சுத்திகரிப்பாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகள், நகரசபைகள் மற்றும் மாநகர சபைகளினால் தினசரி இம்மாவட்டத்தில் சேரும் திண்மக் கழிவுகளை அவ்வப்போது அகற்றுவதில் இரவு பகல் பாராது சேவையாற்றுகின்ற நகர சுத்திகரிப்பாளர்கள் ஒரு நாளைக்கு லீவு எடுத்தால் சுற்று சூழல் சுகாதார நிலமைக்கு என்னாகும். துர்நாற்றம் தாங்க முடியாமல் பிரதேசமெங்கும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலமை உருவாகும்.

தற்போது அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலமையிலும் திண்ம கழிவகற்றலில் நகர சுத்திகரிப்பாளர்கள் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :