'நம்மவரைக் கொண்டாடுவோம்': ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஹனீபா, சமூக சேவையாளர் சமீர் மற்றும் சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களுக்கு கெளரவிப்புடன் பாராட்டுபாறுக் ஷிஹான்-
ய்வுபெற்ற அரசாங்க அதிபர் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா மற்றும் சமூக சேவகரும் ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தருமான ஏ.சி.எம். சமீர் ஆகியோரை கௌரவித்து, அண்மையை வெள்ள அனர்த்தத்தின் போது - பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வத்துடன் உணவுகள் சமைத்து உதவிய சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுபபினர்களை பாராட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28) அட்டாளைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

நாம் ஊடகர் பேரவை (We Journalists Forum) மற்றும் ருஹுணு லங்கா ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை நடத்தியிருந்தன.

நாம் ஊடகர் பேரவை (We Journalists Forum) தலைவர் ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. சாபிர் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். பிர்னாஸ், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். ஹனீஸ், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபிர், அட்டாளைச்சேனை பெரியபள்ளிவாசல் முன்னாள் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ். ஜுனைதீன் மற்றும் மக்கள் வங்கி பொத்துவில் கிளையின் வியாபார மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம். நபீல் ஆகியோர் இந்த நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா மற்றும் சமூக சேவையாளர் ஏ.சி.எம். சமீர் ஆகியோர் இதன்போது நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மனித நேயத்தை மீட்டெடுத்தமையை பாராட்டும் வகையில் - சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களுக்கு மேற்படி நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ், பிரதேச செயலாளர் ஹனீபா, சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ், ருஹுணு லங்கா தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான எம்.எஸ். ஜவ்பர், சமுர்த்தி உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான எம்.எப். நவாஸ், உதவிப் பிரதேச செயலாளர் நஹீஜா ஆகியோர் நிகழ்வில் உரையாற்றினர்.

நிகழ்வில் கௌரவம் பெற்ற முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா நிகழ்வில் ஏற்புரை வழங்கினார்.

ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா - அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகவும் பணிபுரிந்திருந்தார். அவர் கடமையாற்றிய அந்தக் காலம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பொற்காலமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :