அஹமது துரை எனும் நினைவு மலர் வெளியீடு!அஷ்ரப் ஏ சமத்-
சாய்ந்தமருதுரின் முதிஸம் மர்ஹூம் அஹமது துரை அவர்கள் நினைவாக அவரது பிள்ளைகள் இணைந்து எழுதிய அஹமது துரை எனும நினைவு மலர் வெளியீடு அஹமது துரை நலன்புரி நிதியத்தினால் கடந்த 07.01.2024 இல் வெள்ளவத்தை கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியீட்டு வைக்கப்படும் நிகழ்வு நடைபெற்றது.

இந் நுாலை; நுாலாசிரியைக் குழுக்களாக பத்ஹதுல் அல்மா அஹமத் காதர் மொஹிதீன், ஜிப்ரித் அஹமத் ஆதம்பாவா மற்றும் ஏ.எல். நப்ரிஸ் அஹமட் ஆகியோர்கள் எழுதியுள்ளனர்.
இந் நுால் வெளியீட்டுக்கு அஹமத் காலித் அஹ்மத் தலைமை வகித்தார் வரவேற்புரையை எம்.வை.பாவாவும், வெளியீட்டு உரையை பத்ஹதுல் அல்ழா காதர் மொஹிதீன் அவர்களும் சிறப்பு மலர் அறிமுக உரையை சட்டத்தரனி சபானா குல் பேகம் சியாத் அவர்களும் கவிதை ஏ.எல் நப்ரிஸ் அஹமட் அவர்களும் மலர் நயப்புரையை டாக்டர் ஜின்னா ஷரீப்தீன் அவர்களும் கவிதை சிறராஜ் மொஹிடீன், சிறப்புரை அஷ்ஷேக் எப்.எம்.எஸ்.ஏ அன்ஸார மொளலானா (நளிமி) நன்றியுரை பொறியிலாளர் எம்.ஜ.அப்துல் லத்தீப் ஆகியோர்கள் நிகழ்த்தினார்கள்.

இங்கு உரையாற்றிய அன்ஸார் மௌலானா - சாய்ந்தமரு ஈன்றெடுத்த சிறப்புமிக்க ஒர் புதல்வர் அஹமது துரை அக் காலத்தில் சகல சமூகங்களுக்கும் சேவை செய்த ஒர் மனிதர் பொலநறுவையில் அவர் விவசாய அதிகாரியாக பணியாற்றி காலத்தில் நிறுவப்பட்ட அஹ்மத் பாம், அஹமத் கிராமம் இன்றும் உள்ளது. அத்துடன் காலம் சென்ற பிரதமர் டி.எஸ் சேனாநாய்ககாவினால் விவசாயம் ,நீர்ப்பாசனம், வரட்சி காலத்தில் விவசாயத்தை ஊக்குவித்த மைக்காக அஹமது துரை பாராட்டுப் பெற்றவராக விளங்கியுள்ளார். அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் தர்மா கர்த்த சபை செயலாளராக இருந்தும் சேவையாற்றியுள்ளார். பொலநறுவை, மட்டக்களப்பு, அம்பாறை என்ற மூன்று மாவட்டத்திலும் பிரிட்ஷார் காலத்திலிருந்து அவர் வேளான்மை பயிர்ச் செய்கையை இப்பிரதேச மக்களுக்கு ஊக்குவித்துள்ளார். இவர் மட்டக்களப்பு ,யாழ்ப்பாணம் போன்ற கிரிஸ்த்துவ, பாடசாலைகளில் பயின்று அவர் பெற்ற விவசாய கல்வி டிப்ளோமா ஊடாக மேலும் விருத்தி செய்து சேவை செய்துள்ளார். ஆகவே எதிர்காலத்தில் தற்போதைய சமுதாயம் அந்த மனிதருக்காக தேசிய ரீதியில் அஹமது துரைக்காக ஓர் நினைவு முத்திரை வெளியிட வேண்டும். எனவும் மௌலானா அங்கு வேண்டிக் கொண்டார் அவரது 4 தலைமுறைக்கான குடும்பங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கல்வியில் முன்னேறி சேவையாற்றி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. மண்டபம் நிறைந்து உறவினர்கள் ,சாய்ந்தமருதுார் பெரியார்கள் காணப்பட்டன. அனைவருக்கும் இலவசமாக நுால்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் அஹமது துரை நலன்புரி நிதியம் இவரது குடும்பத்தினாரல் ஆரம்பிக்க்ப்பட்டு நிதியளிக்கப்பட்டு கல்முனை, சாய்ந்தமருதுார் பிரதேசத்தில் பல்கலைக்கழகம் செல்லும் மற்றும் பாடசாலைக் கல்வியை பயில வசதியற்ற மாணவர்களுக்கு உயர் கல்வி, மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ் மக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவி, வருகின்றமையும் குறி்ப்பிடத்தக்கது.


 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :