சாய்ந்தமருது, கல்முனையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் !நூருல் ஹுதா உமர்-
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று (07) நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பியலாளர் டாக்டர் எம்.ஏ.சி.எம் பஸால் அவர்களின் நேரடி கண்காணிப்பில் சாய்ந்தமருது பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜெ.கே.எம். அர்ஸத் காரியப்பரின் தலைமையில் சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான சாய்ந்தமருது பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச்சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு கள பணியாளர்கள், கல்முனை மாநகர சுகாதாரப்பிரிவினர், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு டெங்கு பரவும் வாய்ப்பிருந்த பிரதேசங்களில் காணப்பட்ட சிறிய கொள்கலன்கள், சிரட்டைகள், கோப்பைகள், போத்தல்கள் போன்றவற்றை அழித்தொழித்தனர்.

இதே போன்று கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ. ஆர்.எம். அஸ்மி தலைமையில் கல்முனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச்சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு கள பணியாளர்கள், கல்முனை மாநகர சுகாதாரப்பிரிவினர் எனப்பலரும் கலந்துகொண்டு டெங்கு பரவும் வாய்ப்பிருந்த பிரதேசங்களில் காணப்பட்ட டெங்கு உருவாகும் இடங்களை இல்லாது செய்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :