31ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்படும் சோலை வரிகளுக்கு 10 வீதம் கழிவு.!ஏயெஸ் மெளலானா-
ல்முனை மாநகர சபை ஆள்புல எல்லைக்குட்பட்ட ஆதனங்களுக்கான சோலை வரிகளை ஜனவரி-31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவோருக்கு 10 வீதம் கழிவு (Discount) வழங்கப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார்.

ஆகையினால் நடப்பாண்டுக்கான தமது சோலை வரிகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக மொத்தமாக செலுத்தி, இந்த சலுகையை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்முனை மாநகர சபையில் ஒரே கூரையின் கீழ் சேவைகளை வழங்கும் முகப்பு அலுவலக One stop Service கரும பீடங்களில் அலுவலக நாட்களில் முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை கால தாமதமின்றி இலகுவாக இதனை செலுத்த முடியும் என மாநகர ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :