கல்முனை கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களின் பின்னர் வலய கீதம் அறிமுகம்
அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களின் பின்னர் வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.செளதுல் நஜீம் அவர்களின் ஆலோசனையின் பேரில் இயற்றப்பட்டு, இசையமைக்கப்பட்டு ,பாடப்பட்டு வலய கீதம் வெளியிடப்பட்டது.

1994 முதல் வலயக்கல்விப் 12 வலய கல்வி பணிப்பாளர்கள் கடமையாற்றிய நிலையில் முறையாக வலயக் கீதம் இயற்றப்பட்டு ,இசைக்கப்பட்டு ,பாடப்பட்டமை ஓர் வரலாற்று தடயமாகும்.

கல்முனை வலய தமிழ்மொழிப்பிரிவு ஒருங்கிணைப்ப வளவாளராக இருந்து ஓய்வுபெற்ற கி.குணசேகரம் இயற்ற, காரைதீவு ஊடகவியலாளர் இ.கோபாலசிங்கம் இசையமைக்க, வலய கல்வி அலுவலக இசைத்துறைக்கான வளவாளர் திருமதி.எஸ்.கமலநாதன் இவ் வலய கீதத்தை பாடியுள்ளார்.

பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றியாஸா, தமிழ் மொழிக்கான உதவி கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியாழ் மற்றும் வளவாளர் ஜெஸ்மி எம் மூஸா ஆகியோர் இணைப்பாளர்களாக பணி புரிந்தனர்.

வலய கீதம் வெளியிடும் நிகழ்வில் கணக்காளர் வை.ஹபிபுல்லா, பிரதி கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம்.ஜாபிர், எம்.எச்.றியாஸா, ஜிஹானா ஆலிப், திருமதி வருணியா மற்றும் அலுவலக உத்தியோஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :