தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் 2024 ஆரம்ப நிகழ்வு!அஷ்ரப் ஏ சமத்-
வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள கொழும்பு 1 ல் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை யின் 2024 ஜனவரி 1ஆம் திகதி அரசின் சகல ஊழியர்களும் மக்களுக்கான சேவைக்காக தன்னை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வீடமைப்பு அலுவலகத்தில் அலுவலக சேவைகள் இன்று காலை சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது
.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரனி ரஜிவ் சூரியராச்சி, மற்றும் பணிப்பாளர்கள், பொதுமுகாமையாளர் பொறியியலாளர் எம். ஜானக்க , பிரதி பொது முகாமையாளர் கள் மற்றும் ஊழியர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இங்கு உரையாற்றிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் - எமது நிறுவனம் கடந்த காலங்களில் மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனமாக இருந்து வந்தது. தற்போது எமது நிறுவனத்தில் உள்ள 1800 ஊழியர்களும் 24 மாவட்டங்களிலும் உள்ள வீடமைப்புக் காரியாலயத்திலும் உள்ள ஊழியர்கள் இணைந்து இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றிக் கொள்வதற்கு தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் .
கடந்த காலங்களில் கொவிட் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் எமது நிறுவனத்தினால் குறிப்பிட்ட சேவையை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாமல் ஆகிவிட்டது. 1200 மில்லியன் ரூபாய்களை இந்த அதிகார சபையின் நன்மைக்காக சேமித்து வைத்துள்ளோம். அத்துடன் ஊழியர்கள் சம்பளம் .கட்டிடங்கள் முகாமைத்துவத்திற்காக நாம் ஒருபோதும் நிதி அமைச்சின் திரைசேரியின் பணம் பெற்றுக் கொள்ள முடியாது. நாம் இலாபமீட்டும் நிறுவனமாகவும் வீடமைப்புக் கடன்கள், கொழும்பில் தொடா்மாடி வீடுகள் நிர்மானித்தல் கம்பஹா, பதுளை மாவட்ட காரியாலயங்களில் உள்ள சொத்துக்களை நாம் வீடமைப்புக்கள் நிறுவுதல் தனியார் வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தல் மாவட்டம் தோறும் 100 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்களை வழங்குதல் ஏற்கனவே வழங்கியிருந்த வீட்டுக் கடன்களை அறவிடுதல் போன்ற வேலைத்திட்டங்களில் ஊழியர்கள் தம்மை அர்ப்பணித்து சிறந்த ஏ தரத்திலான அதிகார சபையின் மாற்றிக் கொள்வதற்கு பணிப்பாளர் மற்றும் முகாமைத்துவ சபையுடன் ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொண்டார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :